கோவிலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் வெறித் தாக்குதல்: 13 பேர் பலி
ஜம்மூ:
ஜம்மூவில் உள்ள புகழ்பெற்ற ரகுநாத் கோவிலுக்குள் புகுந்த தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் தாக்கியதில்பாதுகாப்புப் படையினர் உள்பட 13 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மீண்டும் தற்கொலைப் படையைைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தக் கோவிலுக்குள்புகுந்தனர்.
கோவிலுக்குள் செல்வதற்கு முன் சராமாரியாக அவர்கள் கோவிலுக்கு வெளியேயும் கண்ணிவெடிகளை வெடித்து,மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தினர்.
கோவிலையொட்டி உள்ள ஹரி மார்க்கெட் பகுதியில் குண்டுகளை வீசி எறிந்தனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே கோவிலுக்குள் புகுந்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் அவர்களை விரட்டிக் கொண்டுசென்று கோவிலைச் சுற்றி வளைத்தனர்.
கோவிலுக்குள் நுழைந்த பின்னரும் தீவிரவாதிகள் பக்தர்களை நோக்கிச் சராமாரியாகச் சுட்டுக் கொண்டேஇருந்தனர்.
இதில் பல பக்தர்கள் குண்டடி பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கோவிலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தஆரம்பித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இதில் 4 பெண்கள், 2 பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 13 பேர் பலியானார்கள். பயங்கரமான தாக்குதல்நடத்திய இரண்டு தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளுமே பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் சில தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களைப் பிடிப்பதற்காக ஜம்மூநகர் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டுக் காயம் அடைந்தனர். அவர்களும் மற்ற பக்தர்கள்அனைவரும் பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதே கோவிலுக்குள் கடந்த மார்ச் மாதம் தான் தீவிரவாதிகள் புகுந்து வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர்பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் குஜராத்-காந்திநகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலுக்குள்ளும்தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர் என்பதும்நினைவிருக்கலாம்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications