விமான, ரயில் நிலையங்களை தகர்க்க சதி செய்தவர்கள்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி:

தருமபுரி அருகே பிடிபட்ட மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் உள்ள முக்கியமானவிமான, ரயில் மற்றும் பஸ் நிலையங்களைத் தகர்க்க சதி செய்திருந்தனர் என்ற அதிர்ச்சியான விவரம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 23 தீவிரவாதிகளையும் கல்லாபி போலீசார் தொடர்ந்து துருவித் துருவி விசாரித்தனர்.

தீவிரவாதிகள் பயன்படுத்திய ஏராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார்கைப்பற்றினர். மேலும் விமான, ரயில் மற்றும் பஸ் நிலையங்களின் வரைபடங்கள், கம்ப்யூட்டர் சி.டிக்கள்போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது, தமிழகத்தில் உள்ள முக்கியமான விமான, ரயில் மற்றும் பஸ் நிலையங்களைத்தகர்க்க இந்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் மேலும் மேலும் விசாரித்து வருகின்றனர்.

அவர்களுடைய கூட்டாளிகள் அனைவரும் எங்கெல்லாம் மறைந்துள்ளனர், இன்னும் என்ன என்னதிட்டங்களெல்லாம் வகுத்துள்ளனர் என்பது குறித்து கைதான தீவிரவாதிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+