5,130 அரசு பஸ்கள் குறைப்பு: தனியார்மய நடவடிக்கை தொடக்கம்
சென்னை:
அரசு போக்குவரத்துக் கழகத்தில் 50 சதவீதம் தனியார்மயமாக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில்அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 2,427 பஸ்கள்குறைக்கப்பட்டுள்ளன.
எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தமிழக அரசு சமீபத்தில் இம்முடிவை அறிவித்தது.
இதன்படி ஒவ்வொரு பிரிவு போக்குவரத்துக் கழகத்திலும் உள்ள பஸ்களின் எண்ணிக்கை பாதியாகக்குறைக்கப்படும். பஸ்கள் சென்று திரும்பும் "டிரிப்புகளின்" எண்ணிக்கையும் பாதியாகும்.
இதைத் தொடர்ந்து மாவட்டவாரியாக பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அறிவிப்பை தமிழக அரசுவெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சென்னையில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் அரசு பஸ்களின் எண்ணிக்கை 2,700லிருந்து1,500ஆகக் குறைக்கப்படுகிறது. அதாவது 1,200 பஸ்கள் குறைக்கப்படுகின்றன.
இதே போல் தமிழகத்தின் பிற பகுதிகளில் 1,227 அரசு பஸ்கள் குறைக்கப்படுகின்றன. அதன்படி திருச்சியில் உள்ளஅரசு பஸ்கள் 615லிருந்து 433ஆகவும், கரூரில் 102லிருந்து 60ஆகவும் குறைகின்றன.
மொத்தத்தில் தமிழகத்தில் உள்ள பஸ்களின் எண்ணிக்கை 12,580 என்பதிலிருந்து 7,450ஆகக் குறைக்கப்படஉள்ளது.
இதைத் தவிர எஞ்சியுள்ள பஸ்களின் "டிரிப்புகளும்" வெகுவாகக் குறைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து போக்குவரத்துக் கழகங்களை இணைக்கும் நடவடிக்கை தொடங்கும். அதன் பிறகு வழித்தடங்களைதனியாருக்கு விற்கும் பணி தொடங்கும்.
பிரபல டி.வி.எஸ். நிறுவனம், மதுரை, சென்னை, திருச்சி, கோவை நகரில் முக்கிய வழித்தடங்களைக்கோரியுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல பிரபல தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் கோயம்புத்தூர்,திண்டுக்கல், நாமக்கல், சேலம், நீலகிரி மாவட்ட வழித்தடங்களைக் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே இந்த பஸ் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் வரும் டிசம்பர் 17ம் தேதி சென்னைதலைமைச் செயலகத்தில் கருத்துக்கள் மற்றும் குறைகள் கேட்கப்படும் என்று உள்துறை செயலாளர் முனீர் ஹோடாஅறிவித்துள்ளார்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications