காவிரிக் கூட்டம்: ஜெயலலிதா பங்கேற்பாரா?
ஹூப்ளி:
வரும் 29ம் தேதி நடக்கும் காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார் என நம்புவதாக கர்நாடகமுதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
ஹூப்ளியில் நிருபர்களிடம் பேசிய அவர், காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க டெல்லியில் பிரதமர் தலைமையில் அந்தக் கூட்டம்நடக்கிறது.
இரு மாநிலங்களிலும் உள்ள நீரின் அளவு குறித்தும், பயிர்களின் நிலை குறித்தும் ஆராயுமாறு கண்காணிப்புக் குழுவுக்கு பிரதமர்வாஜ்பாய் உத்தரவிட்டிருந்தார். கண்காணிப்புக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. இதன் பின்னர் நடக்கப் போகும்முதல் ஆணையக் கூட்டம் இது என்பதால் அதை நான் மிக நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்கிருஷ்ணா.
ஆனால், நேற்று நடந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் வழங்க கர்நாடகம் மறுத்துவிட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் சம்பா சாகுபடியை ஒழுங்காக முடிக்க முடியுமா என்ற கவலை விவசாயிகளை ஆட்டஆரம்பித்துள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக மழையும் நின்றுவிட்டது. இதனால் மிக வேகமாக நிரம்பி வந்த மேட்டூர்அணையின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது. இப்போது அயிைல் 61.40 அடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,959அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து காவிரி பாசனப் பகுதிகளுக்கு 7,707 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
காவிரி ஆணையத்தையும் பிரதமர் வாஜ்பாயையும் தமிழகம் மதிக்கத் தவறியதாக உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவைக் கண்டித்ததுகுறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆணையம் மற்றும் பிரதமர் மீது முழு நம்பிக்கை இருப்பதாக ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இந் நிலையில் வாஜ்பாய் கூட்டும் ஆணையக் கூட்டத்தில் ஜெயலலிதா நிச்சயம் பங்கேற்பார் என்றே தெரிகிறது.
வீரப்பன் விவகாரம்:
ஹூப்ளியில் பேசிய கிருஷ்ணா வீரப்பன் விவகாரம் குறித்தும் விளக்கம் தந்தார். கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப மாநிலஅரசு முழு முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறிய அவர், மணி மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவும் அரசு முயன்றுவருவதாகக் கூறினார்.
கொளத்தூர் மணியை 12 நாட்களுக்குள் காட்டுக்குள் அனுப்ப வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு வீரப்பன் கெடு விதித்துஇன்றுடன் 5 நாட்கள் ஓடிவிட்டன. இதுவரை மணியை அனுப்புவது குறித்து கர்நாடகம் பேசித் தான் வருகிறதே தவிர வேறெந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
வீரப்பனுக்கு ரூ. 20 கோடி தரப்பட்டதாக கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் எழுதியுள்ள புத்தகத்தை தடை செய்யும் திட்டம்ஏதும் அரசிடம் இல்லை எனவும் கிருஷ்ணா தெரிவித்தார்.
-->
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications