சென்னை மேயர் தேர்தல்: அனைத்து கட்சிகள் ஆலோசனை
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம்சென்னையில் நடந்தது.
ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தின் மூலம் திமுக எம்.எல்.ஏவான ஸ்டாலினின் சென்னை மேயர் பதவிபறிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடம் இன்னும் காலியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மேயர் தேர்தலை நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மாநகராட்சிஆணையர் கலைவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேயர் தேர்தலை நடத்துவது தொடர்பாக அப்போது பல்வேறு கட்சியினரும் ஆலோசனை தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து பல குளறுபடிகள் காணப்படுவதாகவும், அதை முதலில் சரி செய்த பின்னரேமேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பல கட்சிகளின் பிரதிநிதிகளும் கருத்து தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications