Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை டி.வியில் பிரபாகரன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப்புலிகளின் "மாவீரர் நாளை" ஒட்டி அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்உரையை இலங்கை அரசின் "ரூபவாஹினி" தொலைக்காட்சி இன்று (புதன்கிழமை) ஒளிபரப்ப உள்ளது.

பிரபாகரனின் இந்த உரையை உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஒளிபரப்பவும் தனியார் தொலைக்காட்சிக்கும்இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கை இன விடுதலைப் போரில் சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட புலிகளை நினைவுகூறும் வகையில்ஆண்டுதோறும் நவம்பர் 27ம் தேதியை "மாவீரர் நாளாக" புலிகள் இயக்கம் கடைபிடித்து வருகிறது.

முதன் முதலாக, 1982ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தான் லெப்டினன்ட் சங்கர் என்ற விடுதலைப்புலி சிங்களராணுவத்தினரால் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் இதே தினத்தில் "மாவீரர் நாள்"கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 17,648 புலிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நாளின் போது வீரமரணம் அடைந்த புலிகளின் நினைவைப் போற்றும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சிகளும்,கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களும் இந்த"மாவீரர் நாளை" அனுஷ்டித்து வருகின்றனர்.

ஒவ்வொரு "மாவீரர் நாளின்" போதும் பிரபாகரன் ஈழத் தமிழர்களுக்கு "வாய்ஸ் ஆப் டைகர்ஸ்" வானொலி மூலம்உரையாற்றுவார். இந்த ஆண்டும் உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர்நிறுத்தஒப்பந்தம் ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பினருக்கும் இடையே நிரந்தரப் போர்நிறுத்தஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதையடுத்து இலங்கையில் குண்டுச் சத்தங்கள் ஓய்ந்து முழுக்க முழுக்க அமைதி திரும்பியுள்ளது. கடந்த செப்டம்பர்மாதத்திலிருந்து புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடந்துவருகின்றன. இதுவரை இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன.

நேற்று நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கமும் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கேயும் முதன்முறையாக கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந் நிலையில் பிரபாகரனின் உரையை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப இலங்கை அரசுக்குச் சொந்தமான"ரூபவாஹினி" முன் வந்துள்ளது.

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்ரையின் அடையாளமாகவே இந்தஒளிபரப்புக்கு அரசு முன் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இதுவரை புலிகளின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள்மட்டும் கேட்டு வந்த பிரபாகரனின் பேச்சை இலங்கையின் அனைத்து மக்களும் கேட்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஒளிபரப்பை உலகெங்கிலும் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் மறு ஒளிபரப்பு செய்யவும் இலங்கை அரசுஅனுமதி தந்துள்ளது.

இன்று (நவம்பர் 26) தன்னுடைய பிறந்த நாளையும் கொண்டாடும் பிரபாகரன், நாளை தனது தொலைக்காட்சிஉரையின் மூலம் புலிகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாகரனின் பேச்சு வழக்கம் போலவே புலிகளின் வானொலி மூலம் நேரடியாகவே ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+