திருச்சியில் மின் தடை: பொதுமக்கள் சாலை மறியல்- போலீஸ் தடியடி
திருச்சி:
திருச்சி விமான நிலையம் அருகே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைபோலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காமராஜர் நகர், பாரதி நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மின்சாரம் இல்லை.
இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். மாணவ, மாணவியர் படிக்க முடியாமல்தவித்தனர். கொசுத் தொல்லை வேறு மக்களை ஆட்டிப் படைத்து வந்தது.
மின்வாரிய அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் என பலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திருச்சி-புதுக்கோட்டைசாலையில் மறியல் போராட்டத்தில் இறங்கினர்.
அதிகப் போக்குவரத்து உள்ள இந்த சாலையில் மறியல் டந்ததால், சாலைப் போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், பொதுமக்களைக் கலைந்து போகக் கூறினர். ஆனால் அவர்கள் கலைந்துபோக மறுத்தனர்.
இதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. மறியல் நடத்திய மக்களைப் போலீஸார் கண்மூடித் தனமாகத் தாக்கினர்.கலைந்து ஓடியவர்களைத் துரத்தித் துரத்தி போலீசார் லத்தியால் அடித்து உதைத்தனர். சிலருக்கு இதில் காயம்ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.
மறியல் மற்றும் போலீஸ் தடியடி காரணமாக அந்த சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்குப் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications