Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி ஆணைய கூட்டம்: ஜெ. பங்கேற்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் 29ம் தேதி நடைபெறும் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பெரும் கருத்துவேறுபாடுகளுக்கு இடையே நடக்கும் இந்தக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக முதல்வர்களுக்கு இடையே மீண்டும்மோதல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர் திறந்து விடாததைக் கண்டித்து தமிழக அரசு அவதிப்பு வழக்குகளைத்தொடர்ந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மன்னிப்புக் கேட்டார்.

மேலும் இந்த மாதத் துவக்கத்தில் காவிரியில் தமிழகத்திற்கு நீரும் திறந்து விட்டது கர்நாடக அரசு. ஆனால்தற்போது நீர் திறந்துவிடப்படுவதை நிறுத்தியுள்ளது. இதனால் சம்பா சாகுபடியைத் தொடர முடியாமல் தமிழகவிவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழக அரசு கேட்டுக் கொண்டும் கூட சம்பா சாகுபடிக்கான நீரைக் கர்நாடக அரசு திறந்துவிட மறுத்துவிட்டது.

இதையடுத்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமலேயே கண்காணிப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில் நாளை மறுநாளை (29ம் தேதி) வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையம் டெல்லியில்கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இதற்காக நாளையே அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச்செல்கிறார்.

காவிரி விவகாரத்தில் ஆணையம் சரியாகச் செயல்படவில்லை என்று கூறி பிரதமரைக் காராசாரமாக விமர்சனம்செய்து கடந்த 5ம் தேதி ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் உச்ச நீதிமன்றம் இதைக் கடுமையாகக் கண்டித்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா அந்தக் கடிதத்தை வாபஸ்பெறுவதாகக் கூறி பதில் கடிதம் அனுப்பினார். காவிரி விவகாரத்தில் பிரதமர் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும்அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு எதிராக தமிழகம் தாக்கல் செய்த 2 அவமதிப்பு வழக்குகளிலும் தீர்ப்புநிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆணையத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக ஜெயலலிதா கடிதம் எழுதிவிட்டதால், காவிரி தொடர்பாக தமிழகம்தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடகமும் ஒரு மனு தாக்கல்செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த ஆணையக் கூட்டம் நடக்கிறது. ஜெயலலிதா, கிருஷ்ணா தவிர பாண்டிச்சேரி மற்றும் கேரளமாநிலங்களின் முதல்வர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதற்கிடையே கிருஷ்ணாவும் கர்நாடகநீர்ப்பாசன அமைச்சர் பாட்டீலும் இந்தக் கூட்டத்தில் தங்கள் முடிவை வலியுறுத்துவது குறித்து இன்று ஆலோசனைநடத்தினர்.

நடுவர் மன்ற உறுப்பினர் மரணம்:

இந்நிலையில் காவிரி நடுவர் மன்றத்தில் உறுப்பினர்களில் ஒருவரான நீதிபதி எஸ்.டி. அகர்வால் நேற்றுமரணமடைந்தார். அவருக்கு வயது 73.

பஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான இவரும் மற்றொரு உறுப்பினரான நீதிபதி என்.எஸ்.ராவும் சேர்ந்து தான் கடந்த ஜூன் 1991ல் காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர் திறந்து விட வேண்டும்என்பது குறித்து பரிந்துரைத்தனர்.

அதன்படியே தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நடுவர்மன்றத்தின் தலைவரான நீதிபதி என்.பி. சிங் உத்தரவிட்டார். இதைத் தான் ஒழுங்காகத் திறந்து விட முடியாது என்றுகர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.

இந்த நடுவர் மன்றத்தால் அமைக்கப்பட்டது தான் காவிரி நதி நீர் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீதிபதி அகர்வால் மரணமடைந்ததைத் தொடர்ந்து நடுவர் மன்றத்திற்கு புதிய உறுப்பினர்நியமிக்கப்படுவம் வரை நடுவர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாவது தாமதமாகும் என்று தெரிகிறது.

வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் நடுவர் மன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை வழங்க இருந்ததுகுறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஒரு முறை நடுவர் மன்ற உறுப்பினர் ஒருவர் மரணமடைந்த போது, புதிய உறுப்பினரைநியமிப்பதற்கு ஆறு மாத காலம் ஆகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை நிலவரம்:

இதற்கிடையே மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 60.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,619கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து காவிரி பாசனப் பகுதிகளுக்கு வினாடிக்கு 8,984 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+