ஏரிக் கரையில் கிடந்த வெடிகுண்டு மூட்டைகள்
தருமபுரி:
தருமபுரி காட்டுப் பகுதியில் 5 பெண்கள் உள்பட 25 நக்சலைட்டுகள் பிடிபட்டதைத் தொடர்ந்து,தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒரு ஏரியின் கரையில் மூட்டை மூட்டையாகக் கிடந்த வெடிபொருட்களைப்போலீசார் பறிமுதல் செய்தனர்.
நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் தர்மபுரி மாவட்ட போலீசார் காட்டுக்குள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தனிப்படை போலீசார் ஊத்தங்கரை, சென்ராயன்மலை, குரக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வளைத்து தேடுதல்வேட்டையில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். 4வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தேவராஜன் ஏரியில் சில ஐயப்ப பக்தர்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த ஏரியின் கரையில் உள்ள ஒரு பாறையின் மேல் 13 மூட்டைகள் இருந்தன. அவற்றின் அருகேசென்றபோது வெடிபொருட்கள் வாசனை அடித்தது.
இதையடுத்து அவர்கள் போலீசாருக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்துவந்து அந்த மூட்டைகளைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது அதில் ஏராளமான வெடிபொருட்கள் இருந்தன.
ஆனால், அவை எந்த வகையான வெடிபொருட்கள் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து சிவசாசி மற்றும் சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பிடிபட்ட நக்சலைட்டு கும்பலுக்கும் இந்த வெடிபொருட்களுக்கும் சம்பந்தம் உண்டா என்பது குறித்தும்போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications