ஆயுத பிரிவு போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
முட்டத்தில் உள்ள ஒரு செக்போஸ்ட்டில் பணியில் இருந்த ஆயுத பிரிவு போலீசார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் ஆயுத போலீஸ் பிரிவில் போலீஸ்காரராகப் பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார்.
முட்டத்தில் உள்ள ஒரு செக்போஸ்ட்டில் செந்தில்குமார் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென்று தன்னைச் சுட்டுக் கொண்டார் செந்தில்குமார்.
இதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சத்தம்கேட்டு ஓடி வந்த மற்ற போலீசார் இவர் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தத் தற்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications