தஞ்சையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பெருமய்யா மற்றும் விக்னேஷ் ஆகிய இரு சிறுவர்களும் புது ஆறு என்ற ஆற்றில் குளிக்கச்சென்றனர்.
அப்போது திடீரென்று ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததால் இரு சிறுவர்களும் ஆற்றில் மூழ்கினர்.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பேர் ஆற்றில் குதித்து சிறுவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.ஆனால் முடியவில்லை.
விக்னேஷின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவனான பெருமய்யாவின் உடலைக் காணவில்லை.அவன் உடலைத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications