பயணியை நடு வழியில் தவிக்க விட்ட கண்டக்டருக்கு தண்டனை
விருதுநகர்:
பயணியை நடு வழியில் தவிக்க விட்டுச் சென்ற பஸ்சின் கண்டக்டர் அந்தப் பயணிக்கு ரூ.6,000 நஷ்ட ஈடுகொடுக்க வேண்டும் என்று விருதுநகரில் உள்ள ஒரு நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வேலூரிலிருந்து செங்கோட்டை செல்லும் பஸ் இடையில் திருமங்கலத்தில்சிறிது நேரம் நின்றது.
அப்போது ஜார்ஜ் என்ற பயணி கண்டக்டரிடம் அனுமதி வாங்கிவிட்டு பஸ்சை விட்டு இறங்கினார். சில நிமிடங்களில்வந்துவிடுவதாகக் கூறிவிட்டுச் சென்றார்.
சொன்னபடியே 2 நிமிடங்களில் திரும்ப வந்தார். ஆனால், பஸ் தான் இல்லை. அந்த பொறுப்பில்லாத கண்டக்டர்"ரைட், ரைட்" கொடுக்க பஸ் கிளம்பி செங்கோட்டைக்குப் போய்விட்டது.
ஜார்ஜின் சூட்கேஸ் அந்த பஸ்சிற்குள் தான் இருந்தது.
இதையடுத்து ஒரு வழியாக வேறொரு பஸ்சைப் பிடித்து செங்கோட்டைக்குச் சென்ற ஜார்ஜ், மிகவும் கஷ்டப்பட்டுதேடியலைந்து குறிப்பிட்ட அந்த பஸ்சைக் கண்டுபிடித்தார்.
உடனே பஸ்சுக்குள் நுழைந்து தன் சூட்கேஸைத் தேடினார் ஜார்ஜ். ஆனால் அங்கு சூட்கேஸ் இல்லாததைக்கண்டவுடன் அவருக்குப் பகீரென்றது. இதுகுறித்து ஜார்ஜ் அந்த பஸ்சின் கண்டக்டரிடம் கேட்ட போது, "சூட்கேசா,அப்படின்னா?" என்ற திமிர் பதில் வந்தது.
இதையடுத்து ஜார்ஜ் விருதுநகர் நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றத்தில் அந்தக் கண்டக்டருக்கு எதிராக வழக்குதொடர்ந்தார்.
இதை விசாரித்த அந்த நுகர்வோர் மன்றம், கண்டக்டரின் பொறுப்பற்ற தன்மைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
ஒரு இடத்தில் பயணிகள் இறங்கினால் அவர்கள் அனைவரும் திரும்ப வரும் வரை பஸ்சை எடுக்கக் கூடாதுஎன்றும் இதைச் சரிபார்ப்பது ஒவ்வொரு பஸ் கண்டக்டரின் கடமை என்றும் இந்த நுகர்வோர் மன்றத்தின் தலைவர்சடாச்சரசுந்தரமும், உறுப்பினர் நாகராஜும் சுட்டிக் காட்டினர்.
பின்னர் கண்டக்டரின் அஜாக்கிரதையால் சூட்கேஸைத் தொலைத்த ஜார்ஜுக்கு அந்தக் கண்டக்டர் தன்னுடையசொந்தப் பணத்திலிருந்தே ரூ.6,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் மன்றம் தீர்ப்பளித்தது.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications