தருமபுரி அருகே நக்சலைட் வேட்டை தொடர்கிறது: டி.ஜி.பி. நேரில் ஆய்வு
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. தேடுதல்வேட்டையை தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் இன்று நேரில் பார்வையிட்டார்.
ஊத்தங்கரை, சென்றாயன் மலை, துலுக்கம்பட்டி மலை ஆகிய பகுதிகளில் நக்சலைட்டுகளைத் தேடும் வேட்டைதொடர்ந்து நடந்து வருகிறது.
இதை நேரில் பார்வையிடுவதற்காக சென்னையிலிருந்து நெய்ல்வால் தருமபுரி சென்றார். அங்கு காட்டுப்பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருப்பதை அவர் நேரடியாகப் பார்வையிட்டார்.
பின்னர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தருமபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களுக்கும் அல்-உம்மா மற்றும் பிற தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை.ஆனால் ஆந்திர மாநில நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம்.
இருந்தாலும் இதுகுறித்த விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே இதைப் பற்றியமுழு விவரமும் தெரிய வரும்என்றார் நெய்ல்வால்.
மேலும் மண்டல ஐ.ஜி. நரேந்திர பால் சிங், டி.ஐ.ஜி. தமிழ்ச்செல்வன், எஸ்.பி. பெரியய்யா உள்ளிட்டோர்தலைமையில் 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு நக்சலைட் வேட்டை நடந்து வருவதாகவும் நெய்ல்வால்குறிப்பிட்டார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications