இலங்கையிலிருந்து 12 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள் சென்னை வந்து அங்கிருந்து பின்னர்தங்கள் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

கடந்த அக்டோபர் 6ம் தேதி இந்திய கடல் எல்லையில் காணாமல் போன படகுகளைத் தேடிச் சென்ற போதுஇலங்கைக் கடற்படையினரால் இந்த 12 பேரும் பிடித்துச் செல்லப்பட்டனர்.

அதன் பிறகு பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இப்போதுதான் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாங்கள்பிடித்துச் செல்லப்பட்டது குறித்து மீனவர்கள் கூறுகையில்,

காணாமல் போன எங்களது படகுகளைத் தேடுவதற்காக நம் அரசின் அனுமதியுடன் தான் கடலுக்குள் போனோம்.

நம் நாட்டு கடல் எல்லைக்குள் நாங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படை வீரர்கள்எங்களைச் சூழ்ந்தனர். எங்களிடமிருந்த அனுமதிக் கடிதத்தைக் காட்டியும் கூட அதை கண்டுகொள்ளாமல்இலங்கை கடற்படையினர் எங்களைப் பிடித்துச் சென்றனர்.

மன்னார் பகுதியில் உள்ள கோர்ட்டில் நாங்கள் ஆஜர்படுத்தப்பட்டோம். அங்கு எங்களைக் காவலில் வைக்கஉத்தரவிடப்பட்டது. இதையடுத்து மூன்று நாட்களுக்கு கோர்ட் காவலில் வைக்கப்பட்டோம்.

அதன் பிறகு அனுராதபுரம் சிறையில் 14 நாட்கள் அடைக்கப்பட்டோம். பிறகு வவுனியா, வெளிக்கடை ஆகியசிறைகளிலும் அடைக்கப்பட்டோம். அதன் பிறகு கடற்படை முகாமுக்கு அனுப்பப்பட்டோம்.

இலங்கையின் பிடியில் இருந்த 53 நாட்களும் பல சிறைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டோமே தவிர எங்களுக்குவேறு எந்தவித தொந்தரவும் இல்லை. கடற்படை வீரர்கள் எங்களைக் கொடுமைப்படுத்தவில்லை.

ஆனால் காலையில் ஒரு பன், மதியம் ஒரு பிளேட் சாப்பாடு மற்றும் இரவில் மீண்டும் ஒரு பன் மட்டுமே சாப்பிடதரப்பட்டது. மேலும் கொசுக் கடித் தொல்லையும் படு மோசமாக இருந்தது.

இலங்கையைச் சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதன் என்பவர் எங்களுக்காக வாதாட வக்கீல் ஏற்பாடு செய்தார்.பலவிதங்களில் எங்களை விடுவிக்க முயற்சி எடுத்துக் கொண்டார். அவரால்தான் நாங்கள் இப்போது வெளிவரமுடிந்தது.

தமிழக அரசு எங்களைக் கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளவில்லை. எங்களது குடும்பத்தினருக்கு எந்தவித நிதிஆதரவும் தரவில்லை.

வழக்கமாக இதுபோன்ற நேரங்களில் குடும்பத்துக்கு தினமும் தலா ரூ.50 கொடுப்பார்கள். அது கூடகொடுக்கப்படவில்லை. அதுதான் எங்களுக்கு வருத்தமாக உள்ளது என்றனர் விடுவிக்கப்பட்ட மீனவர்கள்.

சென்னையிலிருந்து சேது எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இவர்கள் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+