3 நாட்களுக்கு "ஜெட் ஏர்வேஸ்" விமான நேரங்கள் மாற்றம்
சென்னை:
"ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்களின் புறப்படும் நேரங்கள் நவம்பர் 28, 30 மற்றும் டிசம்பர் 1ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி நவம்பர் 28ம் தேதியும் 30ம் தேதியும் மும்பையிலிருந்து கோவா செல்லும் விமானம் காலை 6.15மணிக்குப் புறப்பட்டு, காலை 7.15 மணிக்கு கோவா சென்றடையும்.
அதே போல் கோவாவிலிருந்து காலை 7.45 மணிக்குப் புறப்படும் அதே விமானம் காலை 8.45 மணிக்குமும்பையை வந்தடையும்.
இந்த இரு நகரங்களுக்கும் இடையே பறக்கும் மற்றொரு "ஜெட் ஏர்வேஸ்" விமானத்தின் நேரங்களும் வரும்நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி அந்த விமானம் பிற்பகல் 2 மணிக்கு மும்பையிலிருந்து கிளம்பும் விமானம் ஒரு மணி நேரத்தில் கோவாசென்றடையும். அதே விமானம் மாலை 5 மணிக்கு கோவாவிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு மும்பையைசென்றடையும்.
இதற்கிடையே பெங்களூர்-கோவா-பெங்களூர் விமானத்தின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி பெங்களூரிலிருந்து பிற்பகல் 1.20 மணிக்குக் கிளம்பும் "ஜெட் ஏர்வேஸ்" விமானம் பிற்பகல் 2.50மணிக்கு கோவா சென்றடையும். பின்னர் கோவாவிலிருந்து 5 மணிக்குக் கிளம்பும் இந்த விமானம் மாலை 6.30மணிக்கு பெங்களூர் சென்று சேரும்.
மேலும் மும்பை-இந்தூர்-மும்பை விமான நேரமும் மாற்றப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து மாலை 6.40 மணிக்குக்கிளம்பும் இந்த விமானம் இரவு 7.55 மணிக்கு இந்தூரை அடைந்து, பின்னர் அங்கிருந்து இரவு 8.25 மணிக்குக்கிளம்பி இரவு 9.40 மணிக்கு மும்பையை அடையும்.
குறிப்பிட்ட இந்த மூன்று நாட்களிலும் இந்தியக் கடற்படையினர் கண்காட்சி நடத்துவதையொட்டியே இந்த நேரமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று "ஜெட் ஏர்வேஸ்" இன்று சென்னையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications