கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைத்தது: வீரப்பனிடன் தூது செல்வார்

Subscribe to Oneindia Tamil

மைசூர் & பெங்களூர்::

மூன்று வழக்குகளில் கொளத்தூர் மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

இதன்மூலம் நாகப்பாவை மீட்க வீரப்பனிடம் அவர் தூது செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஜாமீன் மனுக்களை நீதிபதி நாராயணன் விசாரித்தார். அப்போது மணியின் வழக்கறிஞர் பிரகாஷ் அவரை ஜாமீனில் விடக்கோரி மனுக்களை தாக்கல் செய்தார்.

கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மரிகெளடா இந்த ஜாமீனை எதிர்க்கவில்லை.

இதையடுத்து மணியை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், ரூ 1 லட்சத்துக்கு சொந்த ஜாமீனும்,அதே தொகைக்கு ஈடாக இருவரது அத்தாட்சி ஜாமீனையும் மணி தாக்கல் செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறைகொள்ளேகால் ஊரக காவல் நிலையத்தில் மணி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். நீதிமன்றத்துக்கு வரச் சொல்லும் நேரத்தில்வர வேண்டும். வராவிட்டால் ஜாமீன் ரத்தாகிவிடும் என்றார் நீதிபதி.

மணி மீது மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. இதில் தடா வழக்கில் மைசூர் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.இன்னொரு வழக்கில் ஜாமீன் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். மற்ற 3 வழக்குகளில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அவை நிலுவையில் இருந்தன. இப்போது இந்த மூன்றிலும் ஜாமீன்கிடைத்துவிட்டது.

ராஜிவ் கொலையாளிகளை பெங்களூருக்குத் தப்ப வைக்க உதவியது, வீரப்பனுக்கு ஆயுதங்கள் தந்தது, காவல் நிலையத்தைத்தகர்த்தது ஆகிய விவகாரங்களில் மணி மீது இந்த 5 வழக்குகளும் போடப்பட்டிருந்தன. இதில் சாம்ராஜ்நகர், கொள்ளேகால்,ராமபுரா காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள 3 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் இன்று தரப்பட்டுவிட்டது.

அதே நேரத்தில் இன்று சாம்ராஜ்நகர் நீதிமன்றத்தில் வீரப்பனுக்கு உதவியதாகப் போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த வழக்கில் அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். முன்னதாக அவர் மீதான வழக்கைகர்நாடகம் இன்று வாபஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படிச் செய்யாமல் வழக்கை ஒத்தி வைக்குமாறுகர்நாடக அரசு வழக்கறிஞர் கோரினார். வழக்குகள் வாபஸ் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.

இந்த வழக்குக்காக கொளத்தூர் மணி இன்று சாம்ராஜ்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக அவர் பெல்லாரிசிறையில் இருந்து மைசூர் கொண்டு வரப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தில் மணியின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையைப் பார்க்க நீதிமன்றத்தில் பெரும் திரளான பொதுமக்களும், நாகப்பாவின் கட்சியினரும் வழக்கறிஞர்களும் நிருபர்களும் குவிந்தனர். இதனால் பெங்களூர் உயர் நீதிமன்றவளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

உயர் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதையடுத்து பிற நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கர்நாடக அரசுவாபஸ் வாங்கும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் மணி மீதான இன்னொரு ஜாமீன் மனுவின் மீதான விசாரணை மைசூர் நீதிமன்றத்தில் நாளை எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அமைச்சர் நம்பிக்கை:

மணிக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவித்த கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே,நாளை மைசூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

ஜாமீன் கிடைத்துவிட்டால் காட்டுக்குள் செல்ல மணி தயாராக இருக்கிறார் என்று நம்புகிறேன் என்றார்.

நாகப்பாவை விடுவிக்க கொளத்தூர் மணியை காட்டுக்குள் அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் 12 நாள் கெடு விதித்தான். இதில்9 நாட்கள் கடந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சாம்ராஜ்நகர் நீதிமன்ற வாயிலில் இன்று காலை நமது நிருபரிடம் பேசிய கொளத்தூர் மணி, இப்போது நான் நீதிமன்றக்காவலில் இருக்கிறேன். இதனால் இந்த விஷயத்தில் அதிகம் பேச முடியாது. எனக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.கிடைத்தால் நிச்சயம் தூதராகச் செல்லத் தயார். கர்நாடகத் தமிழர் நலனுக்காக இதைச் செய்கிறேன் என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+