காவல் நிலைய பாலியல் பலாத்காரம்: 10 போலீசாருக்கு தண்டனை உறுதி
சென்னை:
சிதம்பரம் காவல் நிலையத்தில் கடந்த 1994ம் ஆண்டு பத்மினி என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவழக்கில், 10 போலீசாருக்கு கடலூர் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம்உறுதி செய்துள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த இளம் பெண் பத்மினியை கடந்த 1994ம் ஆண்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் வைத்தே 10போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதுவும் பத்மினியின் கணவருடைய கண் முன்னாலேயே இந்தக்கொடுமையான சம்பவத்தில் போலீசார் ஈடுபட்டனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த 10 போலீசாரும் கைது செய்யப்பட்டு அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 10 போலீசாருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துதீர்ப்பளித்தது.
படிப்பறிவில்லாத பத்மினி போலீசாரின் மிரட்டல்களைக் கண்டு அஞ்சாமல் வெகு துணிச்சலுடன் எதிர்த்து நின்றுபோராடினார். அவருக்கு வழக்கறிஞர்களும், மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அனைத்து வகையிலும் உதவினர்.
இதனால் தான் பத்மினியை பாலியல் பலாத்காரம் செய்த போலீசாருக்கு தண்டனை வாங்கித் தர முடிந்தது.
இதற்கிடையே தண்டனையை எதிர்த்து 10 போலீசாரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி தினகர் மற்றும் நீதிபதி கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடலூர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் 10 போலீசாரின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
-->
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications