பெங்களூரில் மேலும் 3 தமிழ் தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் கடந்த மாதம் சில தமிழ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மேலும் 3தமிழ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பெங்களூரில் விஜயகுமார், சிவகுமார், குமார், ரவி, சீனிவாசன் ஆகிய ஐந்து தமிழ் தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும்கைப்பற்றப்பட்டன.

இவர்களைத் தொடர்ந்து ராஜா, சத்யா மற்றும் ஜான் ஆகிய மூன்று தமிழ் தீவிரவாதிகளையும் போலீசார் கைதுசெய்தனர். ஜான் தான் இந்தத் தீவிரவாதக் கும்பலின் தலைவன் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மேலும் மூன்று தமிழ் தீவிரவாதிகளைப் பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் குணசீலன் என்ற 62 வயதுப் பெரியவரும் அடங்குவார். கவிஞரான இவர் தமிழ் தீவிரவாதம் குறித்துபல்வேறு புத்தகங்கள் மற்றும் கவிதைகள் எழுதியதாகக் கூறி அவரைப் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர் தீவிரவாதிகளுக்கு வெடிபொருட்களை சப்ளை செய்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கவிதைகள் எழுதியதற்காக ஏற்கனவே இவர் ஒரு முறை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியில் வேலை பார்த்து வந்த குணசீலன் பல ஆண்டுகளுக்கு முன்பே டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார்.

இவரைத் தவிர எலகங்கா பகுததியைச் சேர்ந்த முருகானந்தம் (45) மற்றும் அல்சூரைச் சேர்ந்த ரவி (26)ஆகியோரையும் பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.

இதுவரை மொத்தம் 11 தமிழ் தீவிரவாதிகள் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+