கழுத்தை நெறித்து டிரைவர் கொலை: மனைவி கைது
சென்னை:
இன்னொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த ஒருவரை அவருடைய மனைவி கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு போலீசாரிடம் சரணடைந்தார்.
சென்னை-அண்ணா நகர், கீழ்நெடுங்கரையில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை (45).லாரி டிரைவரான இவருக்கு தேவி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
துரைக்கு இதே பகுதியைச் சேர்ந்த பிரேமா என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்தது.
தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பிரேமாவுக்கே வாரி இறைத்து விட்டு, குடி போதையில் தேவியிடம் பணம்கேட்டுத் தொல்லை கொடுப்பாராம் துரை.
பணம் இல்லையென்று தேவி கூறினால், துரை அவரை நன்றாக அடித்து உதைத்து துன்புறுத்துவதும் அன்றாடம்நடைபெறுமாம். துரையின் இந்தக் கொடுமைகளைத் தன் பிள்ளைகளுக்காகப் பொறுத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் தேவியின் பொறுமை நேற்று எல்லை கடந்தது. மீண்டும் குடித்து விட்டு வந்து தேவியை சராமாரியாகஅடிக்கத் தொடங்கினார் துரை.
தேவியோ சும்மா இருக்கவில்லை. வீட்டில் ஓரத்தில் கிடந்த மின்சார வயரை எடுத்து துரையின் கழுத்தில் சுற்றிஇறுக்கினார். இதில் துரை துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று தேவி சரணடைந்தார். துரையின் உடலைப் போலீசார்கைப்பற்றி தேவியின் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications