ஜெ. அதிரடி: டெல்லி பயணம் திடீர் ரத்து
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை டெல்லிக்குச் செல்லவிருந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதா கடைசி நேரத்தில் தன்னுடைய பயணத்தை ரத்து செய்து விட்டார். அவருக்குப் பதிலாகநிதியமைச்சர் பொன்னையன் இக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஜெயலலிதாவுக்கும், உடன் செல்ல இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தவிமான டிக்கெட்டுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்த விவரம் தெரியாமல் ஜெயலலிதாவை வழியனுப்பி வைக்க கையில் சால்வை, பூங்கொத்துகளுடன்இன்று காலை அமைச்சர்கள் அனைவரும் விமான நிலையத்தில் ஆஜராகிவிட்டனர்.
விமானம் ஏறச் செல்லும் வழியில் உள்ள லவுஞ்சில் அவர்கள் பவ்யமாகக் கையைகட்டி நின்றிருந்தனர். ஆனால்,ஜெயலலிதா வருவதில் தாமதம் ஆனாதையடுத்து விமான நிலைய அதிகாரிகளுடன் நமது நிருபர் பேசினார்.அப்போது டிககெட்டுகள் கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டது தெரிந்தது.
இத் தகவலை நிருபர்கள் சொல்லித் தான் அமைச்சர்களுக்கே தெரிந்தது. இதையடுத்து அவர்கள் போயஸ்கார்டனுக்கு ஓடினர்,
உடல் நிலை சரியில்லாததால் தனது பயணத்தை முதல்வர் ரத்து செய்துவிட்டதாக தலைமைச் செயலகத்தில் இருந்துவெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 25ம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத் துறை செயலாளர் ஏ.கே. கோஸ்வாமி தலைமையில் காவிரிகண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக 70 டி.எம்.சி. நீர் தேவை. இதனை தமிழக அதிகாரிகள் கோரியபோது அவ்வளவுநீரைத் திறந்துவிட முடியாது என்று அந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
இன்று பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடக்கும் கூட்டத்திலும் கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் என்றுதெரியவந்ததால் தான் தனது பயணத்தை ஜெயலலிதா ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த விமானத்தில் பாண்டிச்சேரிமுதல்வர் ரங்கசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார். காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர்சென்றார்.
காவிரி ஆணையத்தின் மீதும் பிரதமர் மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால்,ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. காவிரி ஆணையத்தையும்பிரதமரையும் மதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து ஆணையம் மற்றும் பிரதமர் மீது நம்பிக்கைஇருப்பதாக கடிதம் எழுதினார் ஜெயலலிதா.
மேலும், காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும் என்ற ரீதியிலும் உச்ச நீதிமன்றம்கருத்துத் தெரிவித்திருந்தது. இதனால் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட டெல்லி செல்ல விமானடிக்கெட்களை முன் பதிவு செய்தார் ஜெயலலிதா.
இப்போது அதை ரத்து செய்துவிட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் இந்த விவகாரம் மீண்டும் வந்தால் விமானடிக்கெட்டுகளைக் கூட முன் பதிவு செய்து வைத்திருந்தோம், ஆனால், கடைசி நேரத்தில் உடல் நிலை சரியில்லாமல்போனதால் தான் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று கூறிவிட முடியும்.
இதற்கிடையே டெல்லியில் இன்று நடக்கும் காவிரி ஆணையக் கூட்டத்தில் மோதல் வெடிக்க நிறைய வாய்ப்புகள்உள்ளன. தமிழகத்துக்கு கர்நாடகம் 26 டி.எம்.சி. நீரை மீதம் வைத்துள்ளது. ஆனால், 6 டி.எம்.சி. மட்டுமே மிச்சம்உள்ளதாக கர்நாடகம் கூறுகிறது.
இந்த விவகாரத்தை காைண்டு வரும் மத்திய நீர் வளக் கமிஷனோ, தமிழகத்துக்கு கர்நாடகம் 18 டி.எம்.சி. நீரைத்தர வேண்டும் என்று கூறுகிறது.
தமிழகத்துக்கு நீரைத் தந்தால் தனது சம்பா சாகுபடியை இழக்க வேண்டியிருக்கும் என்று கர்நாடகம் வழக்கமாகபாட்டு பாடுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் தலைமையில் நடக்கும் இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்று தெரிகிறது. பிரதமர் நீரை விடச் சொன்னாலும் கர்நாடகம் தருமா என்பது சந்தேகமே.
உச்ச நீதிமன்றம் சொல்லியே நீர் தராதவர்கள் பிரதமர் சொல்வதை கேட்கப் போவதில்லை. எப்படியும் தமிழகத்துக்குநியாயம் கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியானதால் தான் தனது டெல்லி பயணம் வேஸ்ட் என முதல்வர் நினைப்பதாகதமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications