மதுரையில் பெண் நக்சல்கள் வீடுகளில் போலீசார் சோதனை
மதுரை:
தருமபுரியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 நக்சலைட்டுகளின்வீடுகளில் போலீசார் இன்று சோதனை நடத்தி டைரி, புகைப்படங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
தருமபுரி அருகே காட்டில் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து ஐந்து பெண்கள் உள்பட26 நக்சலைட்டுகளைப் போலீசார் கைது செய்தனர். மேலும் பலர் தப்பி விட்டனர். அவர்களைப் போலீசார்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பிடிபட்டவர்களில் ஐந்து நக்சலைட்டுகள் மதுரையைச் சேர்ந்தவர்கள். ரீட்டா மேரி, சத்ய மேரி, ஜெயந்தி மேரிஆகிய மூன்று நக்சலைட்டுகளும் மதுரை-கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் சுரேஷ் மற்றும்தங்கப்பாண்டியன் ஆகியோரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் தான்.
இவர்களுடைய வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாகப் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போதுஅங்கிருந்து அந்த நக்சலைட்டுகளின் டைரிகள் மற்றும் பல புகைப்படங்களைப் போலீசார் கைப்பற்றினர்.
மேலும் இந்த ஐந்து பேரைப் பற்றி அவர்களுடைய குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் போலீசார் தீவிரமாகவிசாரித்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து போன விஷயமும்அப்போது போலீசாருக்குத் தெரிய வந்தது.
இதற்கிடையே அதிகபட்சம் மூன்று நக்சலைட்டுகள் மட்டுமே தப்பியோடியுள்ளனர் என்றும், விரைவில் அவர்கள்பிடிபடுவார்கள் என்றும் டி.ஜி.பி. நெய்ல்வால் தெரிவித்தார். இதற்காக "க்யூ" பிரிவு போலீசாருக்குக் கூடுதல்அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தமிழக உள்துறை செயலாளர் சையது முனீர்ஹோடா நிருபர்களிடம் கூறுகையில்,
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும். இந்த நக்சலைட்டுகுழுக்களைப் பற்றி தீவிரமான விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளையொட்டி யாராவது சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்தால் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று முனீர் ஹோடா கூறினார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications