பாபர் மசூதி இடிப்பு தினம்: ரயில்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
வரும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ளமுக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு சரியாக 10 ஆண்டுகள் ஆகின்றன. இதைத் தொடர்ந்து தான்கோயம்புத்தூர் நகரில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
அப்போது ஒரு கோயம்புத்தூர் ரயிலிலும் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமான அப்பாவிமக்கள் உடல் சிதறி கொல்லப்பட்டனர்.
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக கேரள மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானிஉள்பட 168 பேர் வரை கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்குஎதிரான வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தையே உலுக்கிய இந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பாபர்மசூதி இடிப்பு தினத்தன்று தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்.
அதே போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பாதுகாப்புநடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டூம் கேமரா, சர்க்யூட் கேமராக்கள் ஆகியவை பல இடங்களில் வைக்கப்பட்டு பயணிகள்கண்காணிக்கப்படுகின்றன. யாராவது வெடிபொருட்கள் வைத்துள்ளனரா என்பதைக் கண்டுபிடிப்பதற்காககதிர்வீச்சுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பயணியையும் கடுமையாகச் சோதனை செய்த பிறகே போலீசார் உள்ளே அல்லது வெளியேஅனுப்புகின்றனர். பயணிகளும் முகத்தைச் சுழிக்காமல் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
பயணிகள் சென்று வருவதற்கு ஒரு வாசல் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த வழியாகவும் உள்ளேவரவோ, வெளியே செல்லவோ முடியாது.
இங்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களும் தீவிரமாகச் சோதனையிடப்படுகின்றன. இதற்காக மெட்டல்டிடெக்டர்களையும், மோப்ப நாய்களையும் போலீசார் பயன்படுத்துகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் திரியும் நபர்கள் குறித்தும், அநாதையாகக் கிடக்கும் பொருட்கள், சூட்கேஸ்கள்போன்றவை குறித்தும் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ரயில் பெட்டிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள்எப்போதும் ரயில்களிலேயே இருப்பார்கள்.
இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் பார்சல் சர்வீஸ் தடை செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 7ம் தேதி வரைஇங்கு யாரிடமிருந்தும் பார்சல் வாங்கிக் கொள்ளப்படாது என்று ரயில்வே போலீசார் அறிவித்துள்ளனர்.
ரயில்களில் வரும் பார்சல்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும்அவர்கள் கூறினர்.
இதேபோல, முக்கியக் கோவில்களின் வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காகநிறுத்தப்பட்டுள்ளனர்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications