கெடுவை நீட்டிக்க வீரப்பனுக்கு கர்நாடகம் கோரிக்கை
பெங்களூர்:
நாகப்பாவை மீட்க கொளத்தூர் மணியை காட்டுக்குள் அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால் கெடுவை நீட்டிக்குமாறுவீரப்பனுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் ராஜு கெளடா மூலமாக இந்தக் கோரிகையை கர்நாடக அரசு முன் வைத்துள்ளது. ரேடியோ மூலமாக அவர் இக்கோரிக்கையை வீரப்பனுக்கு அனுப்பினார். ராஜு கெளடாவின் இந்தப் பேச்சு பெங்களூர், மைசூர், திருச்சி, கோவை ஆகிய 4வானொலி நிலையங்கள் மூலமாக தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
ரேடியோ செய்தியில் ராஜூ கெளடா பேசியிருப்பதாவது:
கொளத்தூர் மணி விடுதலையாவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. சிக்கல்களைக் கடந்து நாகப்பாவை மீட்பதற்காக கொளத்தூர்மணி உன்னை (வீரப்பன்) சந்திக்க வர உள்ளார்.
அவர் உன்னிடம் வருவதற்கு வசதியாக நீ விதித்த கெடுவை நீட்டிக்க வேண்டும். மணி வரும் வரை நாகப்பாவை ஏதும்செய்துவிடாதே.
இவ்வாறு ரேடியோ மூலம் ராஜூ கெளடா கோரிக்கை விடுத்துள்ளார்.
12 நாட்களுக்குள் கொளத்தூர் மணியை தூது அனுப்பாவிட்டால் நாகப்பாவின் தலையைத் துண்டிப்பேன் என்று வீரப்பன்மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கேசட் கடந்த 21ம் தேதி நாகப்பா குடும்பத்துக்கு வந்து சேர்ந்தது.
இந்தக் கெடு 2ம் தேதியுடன் முடிவடைவதால் கர்நாடக அரசும், நாகப்பாவின் குடும்பத்தினரும் பெரும் கவலையில்ஆழ்ந்துள்ளனர்.
வீரப்பனுக்கு ரேடியோ செய்தி வெளியிட்ட அமைச்சர் ராஜூ கெளடா அரசியல்ரீதியில் நாகப்பாவின் நம்பர் ஒன் எதிரியாவார்.கடந்த தேர்தலில் நாகப்பாவைத் தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார் ராஜூ கெளடா.
ராஜூ கெளடா வீரப்பனின் ஆள் என முன்பு அடிக்கடி குற்றம் சாட்டி வந்தார் நாகப்பா என்பது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் ராஜூ கெளடாவை வைத்தே வீரப்பனுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உயர் மட்டக் கமிட்டி கூட்டம்:
இதற்கிடையே வீரப்பன் விவகாரம் குறித்து இன்று கர்நாடக உயர் மட்டக் கமிட்டி ஆலோசனை நடத்தியது.
இதில் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, டி.ஜி.பி. மடியாள், பாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசுலு, ஏ.டி.ஜி.பி. சீனிவாசன்,உளவுப் பிரிவு டி.ஜி.பி. பானர்ஜி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications