கோயம்பேடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
சென்னை:
கோயம்பேடு பேருந்து நிலையத்தை எளிதில் அடைய உதவும் வகையில் வளசரவாக்கம் பகுதியிலிருந்து போரூர்வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூர்ப் பேருந்துகள் தற்போது கிண்டி கத்திப்பாராசந்திப்பு வழியாக 18 கிலோமீட்டர் தூரத்தைச் சுற்றிக் கொண்டு பஸ் நிலையத்தை அடைகின்றன.
ஆனால் போரூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம் வழியாக ஆற்காடு சாலையில் வந்தால் 6 கிலோமீட்டர்தூரம்தான். ஆனால், இந்தச் சாலை முழுவதும் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதில் இரு பஸ்கள் எதிரெதிரே போவதற்குக் கூட இடமில்லை. எனவே இந்தப் பகுதியில் உள்ள சாலையோரஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீஸார் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வளசரவாக்கம் பகுதியில் முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
ஆற்காடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் பல்லாண்டு காலமாக இருந்து வருகின்றன. இதனால் அவற்றை அகற்றகடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.
இப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
புல்டோசர்கள் மூலம் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், பிற அமைப்புகளைஅதிகாரிகள் இடித்துத் தள்ளி வருகின்றனர்.
இந்தப் பணி போரூர் வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications