ஜி.கே.மணியை போலீஸ் காவலில் அனுப்ப கோர்ட் மறுப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர்நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. மாறாக சிறை வார்டன் முன்னிலையில் தான் அவரிடம் போலீசார்விசாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
செங்கல்வராயன் அறக்கட்டளை மோதல் விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் மணி சமீபத்தில் எழும்பூர்கோர்ட்டில் சரணடைந்தார். அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி சென்னை வேப்பேரி காவல் நிலைய போலீசார்எழும்பூர் கோர்ட்டில் அனுமதி கோரியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மணியை போலீஸ் காவலில் அனுப்ப மறுத்து விட்டது. அதேசமயம், மணிஅடைக்கப்பட்டுள்ள மத்திய சிறை வளாகத்திலேயே வைத்து சிறை வார்டன் முன்னிலையிலேயே வேப்பேரிஇன்ஸ்பெக்டர் மாணிக்கம் மணியை விசாரிக்கலாம் என கோர்ட் அனுமதி வழங்கியது.
போலீஸ் காவலில் மணியை அனுப்பினால் அவர் தாக்கப்படலாம் போன்ற அச்சம் எழுந்தது. போலீசார் அவரைதுன்புறுத்தலாம் எனவும் அஞ்சப்பட்டது.
இந் நிலையில் அவரை போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றமே மறுத்துவிட்டது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications