தமிழக கோவில்களை தகர்க்க பயங்கர சதி: 3 தீவிரவாதிகள் கைது
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினமான வரும் 6ம் தேதி தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களைத் தகர்க்கதீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த சதி அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் 2 தீவிரவாதிகளைப்போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் பயங்கரக் கலவரங்கள் வெடித்தன. கோயம்புத்தூரில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்கள் தமிழகத்தையே கிடுகிடுக்கச் செய்தன.
இவற்றைத் தொடர்ந்து ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி வந்து விட்டாலே தமிழகப் போலீசாரிடம் பதற்றம்தொற்றிக் கொள்ளும். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோவில்கள் என்று மக்கள்கூடும் இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபடுவார்கள்.
அதே போலவே இந்த ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி நெருங்கி வருவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார்தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் சென்னையில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனைகளில் மூன்றுதீவிரவாதிகள் சிக்கினர்.
வண்ணாரப்பேட்டையில் தெளகிக், ஜாகீர் உசைன் என்ற இரண்டு தீவிரவாதிகளைப் போலீசார் கைது செய்தனர்.
"இஸ்லாமிய தீவிரப் படை" என்ற பெயரில் பல்வேறு நாசவேலைகளுக்கு திட்டமிட்டிருந்தது அவர்களிடம்நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரிய வந்தது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான பல கோவில்களையும் வரும் 6ம் தேதி குண்டு வைத்து தகர்க்க இந்தத்தீவிரவாதிகள் சதி செய்திருந்ததும் தெரிய வந்தது.
இவர்களுக்கு அல்-உம்மா தீவிரவாதிகள் மற்றும் ஆந்திர நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும்கூறப்படுகிறது. ஆந்திராவில் சமீபத்தில் சாய்பாபா கோவிலில் கடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டிருந்ததீவிரவாதிகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இருந்தாலும் சென்னையில் பிடிபட்ட தீவிரவாதிகள் உண்மையிலேயே எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றவிவரம் உறுதியாகத் தெரியவில்லை.
இதற்கிடையே குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு பகுதியில் மற்றொரு தீவிரவாதியைப் போலீசார்பிடித்துள்ளனர். அப்துல் ரகுமான் என்ற இந்தத் தீவிரவாதியிடமிருந்து கம்ப்யூட்டர்கள், சிடிக்கள், கேசட்டுகள்உள்ளிட்ட நவீன ஆவணங்களையும் போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் அப்துல் ரகுமான் ஒரு ஆசிரியர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
பிடிபட்ட மூன்று தீவிரவாதிகளையும் போலீசார் தொடர்ந்து நன்றாகக் "கவனித்து" வருகின்றனர். இதன் மூலம்மேலும் பல சதிகளும் அம்பலமாகும் என்று தெரிகிறது.
-->
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications