கொளத்தூர் மணியை ஆதரிப்பதா?- காங்கிரசுக்கு பொன்னையன் கண்டனம்
சென்னை:
ராஜீவ் கொலையாளிகளான சிவராஜன் மற்றும் சுபாவை தப்ப வைக்க உதவியவரான பெரியார் திராவிட இயக்கத்தலைவர் கொளத்தூர் மணியை கைது செய்யக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி கூறுவது வன்மையாககண்டிக்கத்தக்கது என்று தமிழக நிதியமைச்சர்பொன்னையன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக காட்டு எல்லைக்குள் கொளத்தூர் மணி நுழைந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறியதற்குகாங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் நிலை, கொளத்தூர் மணி குறித்த உண்மை தெரியாமல் அவர்பேசியுள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
கொளத்தூர் மணி மீது தமிழகத்தில் 4 வழக்குகள் உள்ளன. மேலும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலைசெய்த சம்பவத்தில் தொடர்புடைய ஒற்றைக்கண் சிவராசன் மற்றும் சுபா ஆகியோரை தமிழகத்திலிருந்து தப்பவைத்தவர் கொளத்தூர் மணி.
மேலும் அவர்களைப் பெங்களூரில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தவரும் கொளத்தூர் மணி தான். இதைஅப்போதைய சிறப்பு விசாரணைப் படையின் தலைவரான கார்த்திகேயனே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஇன்னும் கூட கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குற்றவாளியான கொளத்தூர் மணியை ஆதரித்துப் பேசுவது மிகப் பெரும் குற்றமாகும். பீட்டர்அல்போன்ஸின் கூற்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரிக்கிறாரா என்பது தெரியவில்லை.
கொளத்தூர் மணி மீதான வழக்குளை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இந்த நிலையில், தமிழகஎல்லைக்குள் அவர் நுழைந்தால் அவரைக் கைது செய்வது தவிர்க்க முடியாததாகும்.
ஆனால் அவரை விடுதலை செய்ய கர்நாடக காங்கிரஸ் அரசு கடுமையாக முயற்சித்து வருவதைப் பார்த்து நாட்டுமக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ராஜிவ் காந்தி கொலையாளிகளைத் தப்ப வைத்த கொளத்தூர் மணியை விடுவிக்க காங்கிரஸ் கட்சி ஆட்சியில்உள்ள அரசே பிரம்ம பிரயத்தனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது நியாயமற்றது என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் பொன்னையன்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications