காட்டில் வீரப்பனுடன் செஞ்சுரி அடித்தார் நாகப்பா
பெங்களூர்:
கொளத்தூர் மணியை ஜாமீனில் வர வைத்து வீரப்பனுடன் தூது அனுப்ப முயற்சிகள் நடந்து வரும் நிலையல் காட்டுக்குள் நாகப்பாசெஞ்சுரி அடித்துவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நாகப்பாவை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்றான் வீரப்பன். இன்றுடன் அவர் காட்டுக்குள்ளேயேவீரப்பனுடன் 100 நாட்களைக் கடத்திவிட்டார்.
கொளத்தூர் மணிக்கு 4 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்டாலும் கொள்ளேகால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 5வதுஜாமீன் மனு மைசூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றத்தில் வரும் 4ம் தேதி வழக்கு விசாரணை நடக்கும். அப்போது தான் மணிக்கு ஜாமீன் கிடைக்குமா என்றுதெரியவரும்.
இந் நிலையில் நாகப்பா கடத்தல் நடந்து 100 நாட்கள் ஆகிவிட்டதால் கர்நாடக அரசு பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.இன்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் கிருஷ்ணா,
சட்டச் சிக்கல்களைத் தாண்டி மணியை எப்படிவாது தூதுவராக அனுப்பிவிடுவோம். ஒவ்வொரு சட்ட பிரச்சனைகளையும் தாண்டிவருகிறோம். நீதிமன்றங்களின் வரைமுறைகளைத் தாண்டித் தான் அவர் வெளியே வர முடியும்.
ஆனால், ஜாமீனில் வெளியே வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றார்.
கொளத்தூர் மணியை தூதுவராக அனுப்ப வீரப்பன் விதித்த கெடு முடிந்து இரு நாட்களாகிவிட்டன. இந்த கெடுவை நீட்டிக்குமாறுவீரப்பனுக்கு கர்நாடகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந் நிலையில் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான வீரப்பன் விவகாரக் குழு இன்று பெங்களூரில்கூடுகிறது.
நாகப்பாவைக் கடத்தி 100 நாட்கள் ஆகிவிட்டதாலும், கெடு முடிந்துவிட்டதாலும் வீரப்பனிடம் இருந்து விரைவில் இன்னொருகேசட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications