இலங்கை: 3வது கட்ட அமைதிப் பேச்சு இன்று துவக்கம்
ஓஸ்லோ:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 3வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள்நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் இன்று முதல் 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
சமீபத்திய "மாவீரர் தின" உரையின் போது, இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதைவலியுறுத்தி புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசினார்.
தமிழர்களுக்கான சுயாட்சி கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டால் மீண்டும் நாங்கள் ஆயுதங்களைத் தூக்குவதைத்தவிர வேறு வழியே இல்லை என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த சுயாட்சி கோரிக்கை குறித்து தான் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது.
புலிகளின் சார்பில் அதன் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தலைமையிலான ஆறு பேர் கொண்டகுழுவினரும், இலங்கை அரசின் சார்பில் அரசியல் விவகாரத் துறை அமைச்சர் ஜி.எல். பெய்ரிஸ் தலைமையிலானகுழுவினரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து இந்தியாவிடம் தெரிவிப்பதற்காக இலங்கை அதிபர்சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி சார்பில் ஒரு குழுவினர் இன்று டெல்லி விரைகின்றனர்.
சந்திரிகாவின் சகோதரரான அனுரா பண்டாரநாயகே தலைமையில் இந்தக் குழுவினர் இந்தியா செல்கின்றனர்.
புலிகளுக்கு இலங்கை அரசு அளவுக்கு மீறி அதிகாரங்களை அளித்துக் கொண்டிருப்பதாக அவர்கள்இந்தியாவிடம் புகார் கூறவுள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின்மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி ஆகியோரை இந்தக் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
இதற்கிடையே இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள சில உள்கட்சி விவகாரம் தொடர்பாகஅக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரப் ஹக்கீம் ஓஸ்லோ பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளாமலேயே கொழும்புதிரும்பினார்.
வடக்கு, கிழக்கு இலங்கையில் வாழும் முஸ்லீம்களின் பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறுவதற்காகவே இலங்கைஅரசு தரப்புக் குழுவில் ஹக்கீம் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications