For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல டி.வி. நடிகை கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Bhuvaneswariவிபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல டி.வி. நடிகையான புவனேஸ்வரி உள்பட 4 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

சென்னை-வடபழனியில் வசித்து வரும் புவனேஸ்வரி (23) பல டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். "அகல்விளக்கு", "கோகுலம் வீடு", "மந்திர வாசல்", "அர்ச்சனைப் பூக்கள்", "அம்பிகை", "அவளுக்கு மேலே ஒரு வானம்"ஆகியவை முக்கியமானவை.

அவ்வப்போது சில படங்ளிலும் தலையைக் காட்டி வருகிறார். நடிகர் விஜய்யின் "பிரியமானவளே" படத்தில்விவேக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். சரக்குமாரின் "ரிஷி" படத்திலும் குட்டி ரோலில் வந்தார்.

நடிப்பை விட தனது பலான தொழில் மூலம் லட்சக்கணக்கில் பணம் ஈட்டி வரும் நடிகை இவர்.

டாக்டர் பிரகாஷ் வீட்டில் பிடிபட்ட புளு பிலிம்களிலும் இவர் இருப்பதாகக் கூறப்பட்டது. கட்சி பேதமே இல்லாமல்பல அரசியல் புள்ளிகளிடமும் புவனேஸ்வரி தொடர்பு உண்டு. இதனால் இவரை நெருங்க போலீசார் பயந்ததுஉண்டு. மேலும், சென்னை நகர போலீஸ் தலைகளில் முக்கியமானவரை தனது கையில் வைத்திருந்தால் சிக்காமல்தப்பி வந்தார்.

சமீபத்தில் நடிகை மாதுரி உள்பட சென்னையின் முக்கிய விபச்சார முதலைகள் சிக்கியபோதும் இவர் மட்டும் தப்பவும் அந்தபோலீஸ் அதிகாரி தான் உதவினார்.

முதலில் பிளாட்டில் வைத்து தனது விபச்சாரத் தொழிலை நடத்திய புவனேஸ்வரி, கார்களில் தனது பிசினஸை ஆரம்பித்தார்.

இது குறித்து தகவல் வந்தவுடன் எரிச்சலடைந்த சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் புவனேஸ்வரியைப் பிடிக்கஉத்தரவிட்டார். புவனேஸ்வரிக்கு உதவி வந்த போலீஸ் அதிகாரியை அழைத்து கடுமையாக எச்சரித்தும் அனுப்பினார்விஜய்குமார்.

இதையடுத்து புவனேஸ்வரியை விபச்சாரத் தடுப்பு போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். இந் நிலையில்இவரைப் பிடிக்க செட்-அப் விபசசாரத்தில் போலீசார் இறங்கினர். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுஅழைக்க சென்னை-ஆற்காடு சாலையில் ஒரு காரில் வந்து இறங்கினார் புவனேஸ்வரி.

அவரிடம் செட்-அப் செய்யப்பட்ட நபர் பணத்தைத் தர அவரை அழைத்துக் கொண்டு நீலாங்கரையில் உள்ளதனது பங்களாவுக்கு விரைந்தார் புவனேஸ்வரி.

கார் வடபழனி அருகே சென்றபோது போலீஸ் ஜீப்கள் அதை வழிமறித்தன. உடனே கீழே இறங்கிய புவனேஸ்வரிதனது அரசியல் தொடர்புகளையும், போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரையும் சொல்லி மிரட்டினார்.

ஆனால், அவரை பெண் போலீசார் அலேக்காக தூக்கி ஜீப்பில் போட்டனர். காரில் இருந்த அவருடையவேலைக்காரி, அந்தக் காரின் டிரைவர் மற்றும் ஒரு நபர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

நான்கு பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X