சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள வாஜ்பாய் நிபந்தனை
சோலன் (ஹிமாச்சலப் பிரதேசம்):
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால் தான் அந்நாட்டில் நடக்கவுள்ள சார்க்மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
ஹிமாச்சலப் பிரதேசம் சோலனில் அமைக்கப்பட்டுள்ள "மோகன் சக்தி ஹெரிட்டேஜ் பார்க்" என்ற சுற்றுலாஸ்தலத்திற்கு அடிக்கல் நாட்டி வாஜ்பாய் பேசுகையில்,
காந்திநகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மற்றும் ஜம்மூவில் உள்ள ரகுநாத் கோவிலைத் தாக்கியபாகிஸ்தான் பயங்கரவாதிகள் மேலும் இந்தியாவின் பல கோவில்களைத் தாக்க சதி செய்துள்ளனர்.
மதவாதத்திற்கு இடம் கொடுக்காத இந்தியாவில் மதவாத மோதலைத் தூண்டிவிடுவதற்காகவே கோவில்களைக்குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கி வருகின்றனர்.
ஆனால் அவற்றையெல்லாம் இந்தியா சமாளித்து பயங்கரவாதத்தைக் கூண்டோடு அழிக்கும். பயங்கரவாதத்தால்எங்கள் நாட்டைத் துண்டாட பாகிஸ்தானால் முடியாது.
மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முற்றிலுமாக, உடனடியாக நிறுத்திக் கொண்டால் தான்அந்நாட்டில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வேன்.
போக்ரானில் கடந்த 1998ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்திய போது பல்வேறு நாடுகள் இந்தியாவுக்குநெருக்கடி அளித்தன. பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கும் போது நீங்கள் ஏன் சோதனை நடத்துகிறீர்கள் என்றும் சிலநாடுகள் கேட்டன.
பாதுகாப்பு என்ற ஒன்று தேவைப்படும் போது அவர்கள் வராவிட்டால் என்ன செய்வது? அதற்காகத் தான்அணுகுண்டு சோதனை நடத்தினோம் என்று பேசினார் வாஜ்பாய்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications