லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி, நகராட்சி ஆணையர் கைது
திருவாடனை & பண்ருட்டி:
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக திருவாடனையில் ஒரு கல்வி அதிகாரியும், பண்ருட்டியில் நகராட்சிஆணையாளரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஒன்றியம் எஸ்.பி. பட்டினம் ஆரம்பப் பள்ளியில் ஜாக்குலின் சகாயமேரிஎன்பவர் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.
பின்னர் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனுமார்கோவில் ஆரம்பப் பள்ளிக் மாறுதல் பெற்றுச்சென்றார்.
ஆனால் ஜாக்குலினின் பணிப் பதிவேடு, பிறப்பு சான்றிதழ், ஆர்.டி. புத்தகம், ஜி.பி.எப். போன்ற பல ஆவணங்களைபுதுக்கோட்டை மாவட்டத்துக்கு அனுப்பாமல் இருந்து வந்தது.
திருவாடனையில் உதவி கல்வி அதிகாரியாக உள்ள பொன்னுச்சாமி என்பவர் வேண்டுமென்றே இந்தஆவணங்களை அனுப்பி வைக்காமல் காலதாமதம் செய்து வந்தார்.
இது தொடர்பாக ஜாக்குலினும் அவருடைய கணவர் ஆரோக்கியசாமியும் பலமுறை போய் ஆவணங்களை மாற்றித்தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவற்றை மாற்றித் தர வேண்டுமானால் ரூ.1,000 தர வேண்டும் என்றுபொன்னுச்சாமி கூறியுள்ளார்.
ஆனால் ரூ.800 மட்டுமே தருவேன் என்று கூறிய ஆரோக்கியசாமி, அட்வான்ஸாக ரூ.200 மட்டும் கொடுத்தார்.
மீதப் பணத்தை இன்னொரு நாள் தருவதாக பொன்னுச்சாமியிடம் கூறிவிட்டு வந்த ஆரோக்கியசாமி, நேராக லஞ்சஒழிப்புத் துறை போலீசாரிடம் சென்று புகார் செய்தார்.
பின்னர் பொன்னுச்சாமியின் வீட்டுக்குச் சென்ற போலீசார், கெமிக்கல் தடவிய ஆறு 100 ரூபாய் நோட்டுக்களைஆரோக்கியசாமியிடம் கொடுத்து, அதை பொன்னுச்சாமியிடம் கொடுக்குமாறு கூறினர். பின்னர் அங்கேயேபோலீசார் ஒரு இடத்தில் மறைந்து நின்றனர்.
இதையடுத்து பொன்னுச்சாமியிடம் ஆரோக்கியசாமி அந்த 100 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்த போது,மறைந்து நின்று கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பொன்னுச்சாமியை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் பொன்னுச்சாமியின் வீட்டிலும், திருவாடனை கல்வி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரசோதனைகளை நடத்தினர். அவருடைய மனைவி புஷ்பத்திடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் ராமநாதபுரம் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொன்னுச்சாமி, அங்குள்ள கிளைச் சிறையில்அடைக்கப்பட்டார்.
பண்ருட்டியில்...
இதற்கிடையே காண்ட்ராக்டரிடம் லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி ஆணையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார்கைது செய்தனர்.
சமீபத்தில் தான் நகராட்சி ஆணையாளராகப் பொறுப்பேற்ற மனோகரன் பல்வேறு காண்ட்ராக்டர்களிடம் லஞ்சம்வாங்குவதாகப் புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து ஒரு காண்ட்ராக்டரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த மனோகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார்கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications