திருட்டு ஆடியோ, வீடியோ சி.டி. விற்ற 17 பேர் கைது
சென்னை:
சென்னையில் திருட்டு ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை விற்பனை செய்து வந்த 17 பேர் கொண்ட கும்பலைபோலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் திருட்டு விசிடியின் நடமாட்டம் போலவே திருட்டு ஆடியோ சிடிக்களின் நடமாட்டமும்அதிகரித்துள்ளது.
ஒரிஜினல் படங்களின் எம்பி-3 கேசட்டுகள் மற்றும் ஆடியோ சிடிக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால்புதுப் படங்களின் ஆடியோ சிடிக்கள் விற்பனை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளிதரன் போலீஸில் புகார் கொடுத்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை, தி. நகர் ரங்கநாதன் தெரு, அண்ணா சாலை ரிச்சி தெருஉள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 1,818 திருட்டு எம்பி-3 கேசட்டுகள், 1000 ஆடியோ சிடிக்கள் ஆகியவை சிக்கின. திருட்டு ஆடியோசிடி தயாரிக்க உதவிய கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ஆயிரக்கணக்கான வீடியோ சிடிக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட அனைத்துசிடிக்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக சுல்தான், ஆறுமுகம், செல்வம், பாலாஜி உள்ளிட்ட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். உடனடிநடவடிக்கை எடுத்த போலீஸாருக்கு முரளிதரன் நன்றி தெரிவித்தார்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications