லஞ்சம் வாங்கிய 15 அரசு மருத்துவமனை ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
சென்னை:
சென்னை எழும்பூர் குழந்தைகள் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவனையில் பணியாற்றி வரும் 15 ஊழியர்கள்அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ரவீந்திரநிாத் புதன்கிழமைஅதிரடி விசிட் செய்து பார்வையிட்டபோது பல நோயாளிகளும் உறவினர்களும் அவரிடம் இங்கு தாண்டவமாடும்லஞ்சம் குறித்து அழுது புலம்பினர்.
பிரசவம் சாதாரணமான நடக்க வேண்டுமானால் ரூ. 1000 முதல் 1500 வரை நர்ஸுகளுக்குத் தர வேண்டுமாம்.இல்லாவிட்டால் சிசேரியன் பண்ணி செலவை இழுப்பார்களாம்.
மேலும் நோயாளிகளுக்குத் துணையாக வருபவர்கள் மருத்துவமனையில் தூங்கும்போது அவர்களை எழுப்பிதலைக்கு ரூ. 5, ரூ, 10 பறித்து வந்துனர் வார்ட் பாய்கள்.
பெண் குழந்தை பிறந்தால் ரூ. 300ம் ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 500ம் நர்ஸ்களுக்கும் ஆயாக்களுக்கும் தரவேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு மணி நேரம் ஆனாலும் குழந்தையையே காட்ட மாட்டார்களாம்.
இது குறித்து பல பெண்களும் அழுதவாரே புகார் தந்தனர். அரசு மருத்துவமனைக்கு வருவதே வசதியின்மைகாரணமாகத் தான். எங்களிடம் போய் ரூ. 500 கொடு, ரூ, 1000 கொடு என்றால் நாங்கள் எங்கே போவோம் எனஅவர்கள் கேட்டனர்.
சுமார் 15 பேர் வரை எழுத்துப் பூர்வமாகவும் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட டாக்டர் ரவீந்திரநிாத், எழும்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 15ஆண், பெண் நர்ஸுகள், லிப்ட் ஆபரேட்டர்கள், வாட்ச்மேன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 பேர் மீதும் ஏற்கனவே, பல்வேறு ஊழல் புகார்களும், பணியின்போது அலட்சியமாகஇருந்ததாகவும் புகார்கள் உள்ளன.
ஆனால் ஊழியர் சங்கத்தை வைத்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்ததாகவும், இப்போது டாக்டர்ரவீந்திரநாத் அவர்கள் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
தற்போது எழும்பூர் மருத்துவமனையில் புகார்ப் பெட்டி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள்தங்களது புகார்கள், குறைகளை இதில் எழுதிப் போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார்ப் பெட்டியை மருத்துவமனையின் டீன் அடிக்கடி திறந்து பார்த்து நோயாளிகளின் குறைகளைஅவ்வப்போது தீர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி இயக்குநரின் இந்த அதிரடி நடவடிக்கையால் எழும்பூர் மருத்துவமனை ஒரே நாளில்மாறிவிட்டது. இன்று காலை ஒரு ஊழியரும் எந்த நேயாளியிடமும் பணம் கேட்கவில்லை.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications