ஓய்வை ரத்து செய்து கோட்டைக்கு வந்தார் ஜெ.: தீவிரவாதிகள் குறித்து ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்தும், சட்டம்-ஒழுங்கை காக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மூத்தஅதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார்.
கடுமையான முதுகு வலி காரணமாக 4 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்டஜெயலலிதா இரு நாட்கள் ஓய்வில் இருந்தார். ஆனால், இன்றே அவர் மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிட்டார்.
டிசம்பர் 6ம் தேதியையொட்டி தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் மூத்தஅதிகாரிகளுடன் அது குறித்து விவாதிக்க கோட்டைக்கு வந்தார் ஜெயலலிதா.
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேஷ், உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா, டி.ஜி.பி. நெயில்வால், உளவுப் பிரிவுஅதிகாரிகளுடன் ஜெயலலிதா தீவிர ஆலோசனை நடத்தினார்.
நாளை மறுதினம் நடக்கவுள்ள கலெக்டர்கள் மாநாடு, ஜனாதிபதி அப்துல் கலாமின் தமிழக வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்விவாதிக்கப்பட்டன.
ஊடுருவிய 25 தீவிரவாதிகளில் 13 பேர் பிடிபட்டுவிட்டாலும் மீதமுள்ள 12 பேர் பிடிபடாமல் தலைமறைவாகிவிட்டதால் தமிழகத்தில்அச்சம் நிலவுகிறது. இவர்களைப் பிடிக்க 8 தனிப் படைகளை போலீசார் அமைத்துள்ளனர்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அப்துல் கலாம் முதல்முறையாக தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 14ம் தேதி சென்னை வருகிறார். 15ம் தேதி அவர் தனது சொந்த ஊரானராமேஸ்வரத்துக்கும் செல்கிறார். இதனால் சென்னை, மதுரை, ராமேஸ்வரத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஜெயலலிதா ஆலோசித்தார்.
ஆந்திர போலீஸ் விசாரணை:
இதற்கிடையே பிடிபட்ட 13 இஸ்லாமிய தீவிரவாதிகளை விசாரிக்க ஆந்திர மாநில போலீஸாரும் தமிழகம் லந்துள்ளனர். அங்கு சாய்பாபாகோவிலில் நடந்த குண்டு வெடிப்பில் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவர்களிடம் ஆந்திர போலீசார்விசாரணை நடத்தினர்.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications