நாளை புத்த, கிருஸ்துவ மதங்களுக்கு மாறும் 3,000 தலித்கள்

Subscribe to Oneindia Tamil

டிசம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதிலும் 3000 தலித் மக்கள், புத்த மதம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறஉள்ளனர். இத் தகவலை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6ம் தேதி,தமிழகம் முழுவதிலும் 3000 தலித் சமுதாய மக்கள் சென்னை வருகிறார்கள்.

கிழக்குத் தாம்பரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் இவர்கள் அனைவரும் புத்த மதம் மற்றும் கிறிஸ்தவமதங்களுக்கு மாறுவார்கள்.

மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிராக...

மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து இந்த மதமாற்றம் நடைபெறுகிறது. மதம் மாறுகிற தலித் சமுதாயத்தினர்அனைவரும் யாருடைய கட்டாயம், வலியுறுத்தலும் இல்லாமலேயே மதம் மாறுகிறார்கள்.

அதன் பிறகு மாலை 6 மணிக்கு அமைந்தகரையில் நடைபெறும் கூட்டத்தில் 5,000 தலித் மக்கள் தங்களது இந்துப்பெயர்களை கைவிட்டுவிட்டு தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொள்வார்கள்.

இந்த 5,000 பேரும் இனி தமிழர்களாக மானத்துடன் வாழ்வார்களே தவிர இந்து மதத்தின் எந்த சாதியையும்குறிப்பிடுபவர்களாக வாழ மாட்டார்கள்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இதற்கிடையே இந்த மதம் மாறும் 3,000 பேரையும் பெயர் மாற்றும் 5,000 பேரையும் எப்படியாவது தடுக்க தமிழகஅரசு முயற்சித்து வருகிறது. அதிகாரிகள் மூலம் இவர்களுக்கு எல்லா சலுகைகளும் தருவதாக கெஞ்சியும்,அதிமுகவினர் மூலம் மிரட்டி வருகிறது.

மூ.மு.க. எதிர்ப்பு:

இதற்கிடையே தலித்கள் கிருஸ்துவர்களாக மாறினால், அவர்களுக்குத் தரப்பட்ட சலுகைகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர்ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த கட்சியான மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கூறியுள்ளது.

மதுரையில் நிருபர்களிடம் பேசிய இக் கட்சியின் துணைத் தலைவர்களான ராமசாமித் தேவரும், ராசாமியும் இதனைத் தெரிவித்தனர். மதமாற்றத் தடை சட்டத்தைஆதரிப்பதாகவும் கூறினர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+