தஞ்சையில் கைதான 3 தீவிரவாதிகளும் சென்னை சிறையில் அடைப்பு
சென்னை:
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டனத்தில் கைது செய்யப்பட்ட 3 இஸ்லாமிய தீவிரவாதிகளையும் 15 நாள் காவலில்வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மூவரும் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர்.
சென்னையில் சமீபத்தில் தவூபிக் மற்றும் ஜக்காரியா என்ற இரண்டு தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்கள்கொடுத்த தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டனம் பகுதியில் பதுங்கியிருந்த இமாம்வலியுல்லா, காதர், நிஜாமுதீன் ஆகிய 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.
இவர்கள் இஸ்லாமிய பாதுகாப்புப் படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
இவர்களிடமிருந்து 9 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.மல்லிப்பட்டனத்தில் கைது செய்யப்பட்ட இந்த 3 தீவிரவாதிகளையும் சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில்வைத்து போலீசார் அடித்து உதைத்து விசாரணை நடத்தினர்.
நேற்று சேதுபாவா சத்திரம் சென்ற சென்னை போலீசாரிடம் இந்த மூன்று பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.இதையடுத்து இந்த மூன்று பேரையும் போலீஸார் மிக பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னை கொண்டுவந்தனர்.
எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்கநீதிபதிஉத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications