தமிழகம் முழுவதும் போலீசார் விடிய விடிய சோதனை
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால் அதைமுறியடிக்க சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேற்றிரவு முழுவதும் போலீசார் விடிய விடியவாகன சோதனைகளில் ஈடுபட்டனர். மேலும் சந்தேகத்துக்கிடமான வீடுகளிலும் சோதனைகள் நடந்தன.
இன்றோடு பாபர் மசூதி இடிக்கப்பட்டு 10 வருடங்களாகிறது. இதையடுத்து தீவிரவாதிகள் நாச வேலைகளில்ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் முவதிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
75,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர கமாண்டோக்கள், வெடிகுண்டுநிபுணர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, நேற்று இரவு முழுவதும் விடிய விடிய சென்னை நகரிலும் தமிழகத்தின் பிற நகரங்கள்,நெடுஞ்சாலைகளில் தீவிர வாகன சோதனைகள் நடந்தன.
முக்கிய சாலைகளில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி அந்தப் பக்கமாக வந்த அத்தனை வாகனங்களையும்நிறுத்தி சோதனை போட்டனர். சந்தேகமான நபர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.சிலர் தொடர்ந்து காவல் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.
-->
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications