போலீசை மீறி 53 தலித்கள் மதம் மாற்றம்: பலர் கைது
சென்னை:
சென்னையில் போலீஸாரின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி 53 தலித்துகள் மதம் மாறினர்.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கண்டித்து 3000 தலித்துகள் கிறிஸ்தவ மற்றும் புத்த மதத்திற்கு மாறப் போவதாக அகில இந்தியகிறிஸ்தவ காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தலித் சமுதாய கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்தன.
இதையடுத்து நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சென்னை கிழக்குத் தாம்பரம் பகுதியில் சேலையூர் அருகேகாமராஜர்புரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மதம் மாற பல ஊர்களில் இருந்து வேன்களில் வந்த தலித்களைபோலீசார் நெடுஞ்சாலைகளிலேயே நிறுத்தி திருப்பி விரட்டினர். திரும்பிச் செல்ல மறுத்தவர்களிடம் நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டுவிட்டதாக பொய் சொல்லியும் திருப்பி அனுப்பினர்.
நிகழ்ச்சிக்காக போடப்பட்டிருந்த பெரிய பந்தலையும் போலீசாரே ஆள் வைத்து இரவோடு இரவாக பிரித்தனர். நிகழ்ச்சிக்குவந்திறங்கிய ஆயிரக்கணக்கான சேர்களையும் போலீஸ் லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சிக்காக மைதானத்தை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த 10 கூலித் தொழிலாளர்களைக் கூட அடித்துபோலீஸ் வேனில் அள்ளிப் போட்டுச் சென்றனர்.
பந்தலுக்கு வந்த பெண்கள் உள்ளிட்ட பலரையும் கைது செய்வோம் என்று மிரட்டியும் விரட்டினர்.
இருப்பினும் காலையில் திட்டமிட்டபடி பிரார்த்தனை, ஜெபம் ஆகியவை தொடங்கின. போலீசாரின் இந்த கெடுபிடிகளால் 300தலித்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு வந்தனர். இதில் 53 தலித்கள் புத்த, கிருஸ்துவ மதங்களுக்கு மாறினர்.
போலீசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மதமாற்ற நிகழ்ச்சி நடந்து முடிந்தது. சுமார் 30 பேர் கிறிஸ்தவ மதத்திற்கும், 23 பேர் புத்தமதத்திற்கும் மாறினர். அவர்களுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் தாமஸ் ஞானஸ்தானம் செய்து வைத்தார். புத்த மதத்திற்குமாறியவர்களுக்கு அசோக் கோஷ் என்ற புத்த துறவி மதமாற்றம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி காரணமாக மேடவாக்கம் சாலை, காமராஜர்புரம், கிழக்குத் தாம்பரம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
அதே போல இந்துப் பெயர்களை நீக்கிவிட்டு தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டத் திட்டமிட்டிருந்த விடுதலைச்சிறுத்தைகளின் நிகழ்ச்சியையும் போலீசார் தடுத்தனர். இதையொட்டி நூற்றுக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள்தொண்டர்களையும் கைது செய்தனர்.
திருமாவளவனுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு:
இதற்கிடையே தலித்கள் மதம் மாறுவதை ஆதரிக்க வேண்டாம் என திருமாவளவனுக்கு பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
பா.ஜ.கவின் சட்டமன்றத் தலைவர் லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக்களாக இருந்தால் மட்டுமே தலித்களுக்கு உரிய சலுகைகள்வழங்கப்படும். மதம் மாறினால் தர முடியாது. எனவே, அவர்கள் மதம் மாறுவதை ஆதரிக்கக் கூடாது.
இலங்கையில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே கூட்டாட்சி தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தீவிரவாத பாதையில் செல்லமாட்டோம் என புலிகள் அறிவித்துள்ளனர். இந் நிலையில் அவர்களை ஆதரித்ததற்காக மதிமுக தலைவர் வைகோவை சிறையில் வைத்திருப்பது தவறு.அவரை அரசு விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் லட்சுமணன்.
-->


Click it and Unblock the Notifications
