காஞ்சி மடத்தில் ஜாதிப் பாகுபாடு: எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு வேறு விடுதி இயக்கப்பட்டு வருவதைக் கண்டித்துபோராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
மத மாற்றத் தடை சட்டத்தை ஆதரித்து வரும் காஞ்சி சங்கராச்சாரியார் தலித்கள் தொடர்பாக தெரிவித்த சில கருத்துக்கள் அந்தசமூகத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் மீது வழக்குத் தொடரவும் புதிய தமிழகம்திட்டமிட்டுள்ளது.
மேலும் தலித் என்று சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் கோவிக்குள் விட மாட்டோம். ஆதி திராவிடர்களாகத் தான் அவர்கள் வரவேண்டும் என்றும் சங்கராச்சாரியார் கூறியிருப்பற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மதமாற்றத் தடை சட்டம் குறித்து அவர் பேசி வந்தாலும் தனது மடத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்லூரியில் இரு விதமானஉணவகங்களும் விடுதிகளும் நடத்தப்படுவது குறித்து அவர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்து வருகிறார்.
உயர் ஜாதியினருக்கு ஒரு விடுதியும் மற்ற ஜாதியினருக்கு ஒரு விடுதியுமாக காஞ்சி மடம் இயக்குகிறது. அதே போலத்தான்உணவகங்களும் இரு விதமாக உள்ளன.
காஞ்சி மடத்தின் இச் செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுகூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மதமாற்றத் தடை சட்ட விஷயத்தில் ஒரு அரசியல்வாதியைப் போலவே சங்கராச்சாரியார் செயல்பட ஆரம்பித்துவிட்டார். இதில்அரசியல்வாதி போல பேசுகிறார். அறிக்கை விடுகிறார். கூட்டம் போடுகிறார்.
அதே சமயம் தான் நடத்தும் கல்லூரியில் பிராமணர்களுக்கு ஒரு விடுதியும் மற்ற ஜாதியினருக்கு ஒரு விடுதியும் நடத்தி வருகிறார்.
தலித்கள் மத மாற்றத்துக்குக் காரணமாக உள்ள வர்ணாசிரம தர்மம், தீண்டாமை குறித்து கேள்வி கேட்டால் மட்டும் வாய்திறக்கவே மறுக்கிறார் சங்கராச்சாரியார். மற்ற விஷயங்களில் தானாகவே முன் வந்து கருத்து சொல்லும் இவர் இதில் மட்டும்கேட்டாலும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?
இதை எதிர்த்து வரும் 9ம் தேதி காஞ்சிபுரத்தில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு நல்லகண்ணு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-->
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications