லாரி மோதி ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர், காவலர் பலி
உடுமலைப்பேட்டை:
உடுமலைப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரும், ஹோம் கார்ட்ஸ் காவலரும் லாரிமோதி உயிரிழந்தனர்.
நேற்று அதிகாலை இச் சம்பவம் நடந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் ரம்ஜான் பண்டிகையும் வந்ததைத்தொடர்ந்து மாநிலத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலீசாரின் ரோந்தும் அதிகரிக்கப்பட்டது. இந்தப் பணியில் ஹோம் கார்ட்ஸ் காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மாநிலம் முழுவதும் இரவு முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீசார் ஜீப், வேன்கள், மோட்டார் சைக்களிகள், சைக்களிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று இரவு உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் ஹோம் கார்ட்ஸ் காவலர் ஒருவரும் மோட்டார்சைக்கிளில் ரோந்து சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்தலாரி அவர்கள் மீது மோதியது.
இதில் பின்னால் அமர்ந்திருந்த ஹோம் கார்ட் காவலர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சப்-இன்ஸ்பெக்டர் பலத்தகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவர்கள் மீது லாரியை மோதிய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். வேறு வாகனங்களில் வந்தவர்களும் பொது மக்களும் தான்சப்-இன்ஸ்பெக்டரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பலியான ஹோம் கார்ட் காவலர் தமிழக மின் வாரியத்தில் பணியாற்றி வந்தார்.
இன்னொரு விபத்தில் 4 பேர் பலி:
இந் நிலையில் கோவை மாவட்டத்தில் நடந்த இன்னொரு விபத்தில் 4 பேர் இறந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
சூலூர் அருகே வேன் மீது லாரி மீது மோதியதில் இச் சம்பவம் நடந்தது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மாடுகளை ஏற்றி வந்த அந்த லாரி கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வேன் மீது லாரி மோதியது.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications