தீவிரவாதிகளை தேடி தனிப்படை பெங்களூர் விரைந்தது
சென்னை:
தலைமறைவாக உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளைத் தேடி பெங்களூர் மற்றும் வேறு சில நகரங்களுக்குதனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயக்குமார் தெரிவித்தார்.
அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்கப்பட்டதன் 10வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதும்தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்பட்டு தேசம் முழுவதுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தமிழகத்துக்குள் மட்டும் 25 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மாநில போலீசாருக்கு இன்டெலிஜென்ஸ் பீரோதகவல் வந்தது. இதையடுத்து தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தஞ்சை, சென்னை, தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி 13தீவிரவாதிகளை போலீசார் மடக்கினர். ஆனால், மீதமுள்ள 12 பேரால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்றஅச்சம் இருந்தது.
இதனால், போலீசாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு சுமார் 75,000 போலீசார் பாதுகாப்பு, ரோந்து,கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோவில்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளால் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் டிசம்பர் 6 மிகஅமைதியாக முடிவடைந்தது. மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கவில்லை.
கமிஷ்னர் பேட்டி:
இந் நிலையில் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது,
தலைமறைவாகிவிட்ட 12 தீவிரவாதிகளில் சிலர் பெங்களூருக்கும் சிலர் ஹைதராபாத்துக்கும் தப்பிவிட்டதாகதகவல் கிடைத்துள்ளது. அவர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை இணை கமிஷ்னர் சைலேந்திர பாபு தலைமையிலான படையினர் ஹைதராபாத் நகருக்குச் சென்றுவந்துள்ளனர். பெங்களூருக்கும் வேறு சில நகரங்களுக்கும் தனிப்படை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
தமிழகத்திற்குள்ளேயும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளைப் பிடிக்காமல்ஓய மாட்டோம்.
தீவிரவாதிகள் முழுமையாக பிடிபடும் வரை கோவில்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட மாட்டாது. அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு தொடரும் என்றார்விஜயகுமார்.
சிறையில் வேலூர் இமாம்:
இதற்கிடையே வேலூர் மாவட்டம் பேரனாம்பேட்டையில் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டஇஸ்லாமிய பாதுகாப்புப் படை என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளஇமாம் அப்துல் ரஹ்மான் சிபிலி, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிபிலியின் சொந்த ஊர் தென்காசியாகும். இவரது தந்தை கண்ணப்பன். சில ஆண்டுகளுக்கு முன் தான் இஸ்லாமியமதத்துக்கு மாறினார் சிபிலி. தமிழ் தவிர ஆங்கிலம், அரபி மொழிகளில் சிறப்பாக பேசும், எழுதும் திறன்படைத்தவர் சிபிலி.
-->












Click it and Unblock the Notifications