புயல் சின்னத்தால் தமிழகத்தில் கன மழை: காவிரி விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல்நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக காவிரி டெல்டாப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காகநீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை மாவட்டங்களிலும் தஞ்சை, நாகப்பட்டனம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைபெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சாகுபடியில் உள்ள சம்பா பயிருக்கு இந்த மழை மிக உபயோகமாக இருக்கும் என்று விவசாயிகள்மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கர்நாடகம் மீண்டும் முரண்டு பிடித்து நீர் விட மறுத்ததால் பல பகுதிகளில் சம்பாபயிர்கள் கறுகும் நிலை ஏற்பட்டது.
இப் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் மேட்டூரில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
இந் நிலையில் தான் இந்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும்மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே போல மழையால் மேட்டூர் உள்பட தமிழகத்தில் பல அணைகளுக்கும் நீர் வரத்தும்அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 53.64 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,992 கன அடி நீர்வர ஆரம்பித்துள்ளது. இரு வாரங்களுக்கு முன் 61 அடியாக இருந்தது. பாசனத்துக்கு தொடர்ந்து நீர் விட்டதால்அணையில் நீட் மட்டம் மடமடவென குறைந்தது.
இப்போது மழை பெய்திருக்காவிட்டால் மேட்டூர் அணையின் நீரை முழுவதும் விட்டாலும் பயிர்களை காப்பாற்றிஇருக்க முடியாது.
தமிழகத்துக்கு இந்த ஆண்டுக்கு மட்டும் இன்னும் கிட்டத்தட்ட 26 டி.எம்.சி. நீரை கர்நாடகம் மிச்சம் வைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
மீனவர்கள் கதி என்ன?:
இதற்கிடையே வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 300 மீனவர்கள் கரைதிரும்பவில்லை. இவர்கள் புயலில் சிக்கியிருப்பார்கோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கன மழை நீடிக்கும்:
இதற்கிடையே தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 120 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
-->
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications