மோட்டார் சைக்கிளில் செல்வர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை:
சென்னையில் திருட்டு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கொண்டகும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் வீடு புகுந்து திருடுதல், கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனியாக வாகனங்களில்வருவோரை நிறுத்தி வழிப்பறி செய்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன.
இதையடுத்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல்தனிப்படைகளை அமைத்து தீவிர வேட்டை நடத்தினர்.
இதில் பப்லு, மோகன் சிங், டைட்டஸ், ஜமால் ஆகிய 4 பேர் சிக்கினர். இவர்களில் 3 பேர் கல்லூரி மாணவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்குக் கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிள்களில் தம்பதிகள், காதலர்களை மிரட்டி அவர்கள்வைத்துள்ள செல்போன்கள் போன்றவற்றைப் பறிப்பது இவர்களது வழக்கம்.
வசதியான குடும்பங்களைச் சேர்ந்த இந்த நான்கு பேரும் வழிப்பறி செய்யும் செல்போன்களை பிறருக்கு விற்றுவந்துள்ளனர்.
நன்கு பேரும் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர ராஜு, சுந்தரம், கலைச்செல்வன், புல்லட் ரவி ஆகியநான்கு திருடர்களும் இந்த தனிப் படை போலீஸாரிடம் பிடிபட்டனர்.
வீடு புகுந்து திருடுதல், பூட்டை உடைத்துத் திருடுதல் போன்ற செயல்களில் இவர் ஈடுபட்டு வந்தனர். இவர்களில்ரவி என்ற புல்லட் ரவி தனது பெற்றோர் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் அவர்களைக் காப்பாற்றதிருடியதாக கூறினார்.
ஆனால் துரைப்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்து வந்தவர் ரவி என்று போலீஸார் கூறுகின்றனர். இவர்25க்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்துத் திருடியுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த 8 பேரிடமிருந்தும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள திருட்டுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications