நாளை கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு: ஜெ. முக்கிய ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் தீவிரவாதிகள், நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட கலெக்டர்கள்,மாவட்ட எஸ்.பிக்களின் மூன்று நாள் மாநாடு நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு முதல்வர்ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.
ஒரே இடத்தில் மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைமை நிர்வாகிகளும் கூடுவதால் அவர்கள் மீது பயங்கரதாக்குதல் நடக்கலாம் என உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து இந்த மாநாடு நடக்கும் தலைமைச் செயலகத்துக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தலைமைச் செயலக வளாகத்தில் சுமார் 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலக ஊழியர்களே அடையாள அட்டையைக் காட்டினால் தான் அனுமதிக்கப்படுகின்றனர்.கோட்டையின் அனைத்து வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்களும் மோப்ப நாய்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள அரங்கத்தில் இந்த 3 நாள் மாநாடுநடக்கிறது. ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகு நடைபெறும் 3-வது மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதா முதல்வரான பிறகு முதல் முறையாக மாநாடு நடந்தது. அதன் பிறகுஇந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. வறட்சி நிலை குறித்து விவாதிப்பதற்காக கலெக்டர்கள் மாநாட்டைஅப்போது முதல்வர் ஜெயலலிதா கூட்டியிருந்தார்.
இப்போதைய மாநாட்டில், பட்ஜெட்டில் ஜெயலலிதா அறிவித்திருந்த தமிழகத்தை முன்னேற்றுவதற்கான 15 அம்சத்திட்டங்கள் குறித்தும், அது அமலாக்கப்பட்ட விதம் குறித்தும் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
முதல் நாளான திங்கள்கிழமை கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டுக் கூட்டம் நடக்கிறது. அடுத்த நாளான10ம் தேதி கலெக்டர்கள் மாநாடும், 11ம் தேதி எஸ்.பிக்களின் மாநாடும் நிடைபெறுகிறது.
மூன்று மாநாடுகளுக்கும் ஜெயலலிதா தலைமை தாங்க உள்ளார்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications