புது வீராணம் திட்டத்தில் கோடிக்கணக்கில் ஊழல்?
வீராணம் ஏரியிலிருந்து சென்னை வரை குழாய் பதிக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட்டதில் பெரும் ஊழல்நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே 1970களில் திமுக அரசு கொண்டு வந்த இந்த வீராணம் திட்டத்தில் ஊழல் நடந்தாகக் கூறி அத் திட்டமேபல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சி முழுவதும் தூக்கம் போட்ட இந்தத் திட்டத்தைகடந்த முறை ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தூசு தட்டி கையில் எடுத்தார்.
புது வீராணம் திட்டம் என்ற பெயரில் இத் திட்டத்தை அமலாக்கி சென்னை நகருக்கு குடிநீர் கொண்டு வரப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதில் குழாய் பதிப்பதற்கான டெண்டர் விட்டதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகத்தெரிகிறது.
இந்தப் பணிக்காக 2 விதமான குழாய் பதிப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. ஓங்கூர் ஆற்றிலிருந்துசென்னை அருகே உள்ள போரூர் வரை வரையிலான 115 கிலோமீட்டர் தொலைவுக்கு இரும்புக் குழாய்களைப்பதிப்பதற்கு ஒரு டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டரை எடுக்க 3 நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் டாட்சல் பிரைவேட் லிமிடெட் என்றநிறுவனத்துக்கு டெண்டர் தரப்பட்டது.
ரூ. 255 கோடிக்கு டெண்டர் எடுத்திருந்த அந்த நிறுவனம் திடீரென்று தொகையை ரூ. 377 கோடிக்கு உயர்த்தியது.இதையடுத்து அதன் டெண்டர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த நிறுவனத்தை விட குறைவாக கேட்டிருந்த புன்காக் ஹோர்டிங்ஸ் என்ற நிறுவனம் தான்கேட்டிருந்த தொகையை விட ரூ. 40 கோடி உயர்த்திக் கொடுத்தால் இந்தப் பணியை மேற்கொள்வதாகக் கூறியது.
அதே சமயத்தில் 3-வது நிறுவனமான கேமன் இன்டியா நிறுவனம் தனது தொகையை ரூ. 479.99 கோடியிலிருந்துரூ. 360.90 கோடியாக குறைத்தது.
இதையடுத்து மறு டெண்டர் விடப்பட்டது. இந்த முறை கேமன் இன்டியா நிறுவனம் ரூ. 337.19 கோடி கேட்டது.இது அரசு நிர்ணயித்த தொகையைவிட ரூ. 38.97 கோடி அதிகமாகும்.
இருந்தாலும் இந்த நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகபணம் கேட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
முதலில் பணம் கூடுதலாகக் கேட்டதால் தான் டாட்சல் பிரைவேட லிமிட்டெட் நிறுவனத்துக்கு தரப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது.ஆனால், இப்போது மட்டும் ஏன் மூன்றாவது நிறுவனத்துக்கு அதிக பணம் தர ஒப்புக் கொள்ளப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது.
இங்கு தான் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications