டெண்டர் மோசடி: ஜெ. விளக்கம் தர வேண்டும்- ராமதாஸ்
புது வீராணம் திட்டத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து முதல்வர் ஜெயலலிதாமக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புது வீராணம் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள புகார்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது அரசின் கடமை. இந்தத்திட்டத்தின் இறுதிக் கட்டத்தின் போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த துரைராஜ் பதவியிலிருந்துநீக்கப்பட்டார்.
அத்தோடு, மெட்ரோ வாட்டர் துறையின் உயர் அதிகாரிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.அமைச்சரையும் அதிகாரிகளையும் மாற்றி டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த அதிகாரிகள் அதிரடி இடமாற்றத்திற்கும், டெண்டர் கொடுக்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதுதெரிகிறது.
டெண்டர் விடுவதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதிக விலைக்குக் கேட்டநிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பணம் அவர்களுக்கு அள்ளித்தரப்பட்டுள்ளது. இது ஏன்?
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இந்தத் திட்டம் பிரச்சினைக்குரியதாகவே இருந்து வருகிறது. இந்தத் திட்டம்சாத்தியமானதல்ல என்று தெரிந்த பிறகு வீராணம் திட்டத்தைக் கைவிட்டார் எம்.ஜி.ஆர்.
ஆனால் அவர் வழி வந்ததாக கூறிக் கொள்ளும் தற்போதைய அதிமுக அரசு வறட்டுப் பிடிவாதமாக இந்தத்திட்டத்தை நிறைவேற்றப் போவதாக கூறி வருகிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. உயருவதற்கான சாத்தியக்கூறுகளையேக் காணோம். இந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து,அங்கிருந்து பைப்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வரலாம் என்பதை எப்படி ஏற்க முடியும்?
சென்னைக்கு கிருஷ்ணா ஆற்றிலிருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என்று ஆந்திராவுடன்உடன்பாடு உள்ளது. ஆனால் ஒரு ஆண்டு கூட முழு அளவு தண்ணீரை ஆந்திரா தந்ததில்லை.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications