நாகப்பாவை தமிழக அதிரடிப்படை கொன்றிருக்க வாய்ப்பில்லை: அத்வானி
டெல்லி:
நாகப்பாவை தமிழக அதிரடிப் படை கொன்றிருக்க வாய்ப்பில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நள்ளிரவில் நிருபர்களிடம் பேசிய அவர், நாகப்பாவின் உடல் கர்நாடக காட்டுப் பகுதியில் தான் கிடந்தது. தமிழகஎல்லையில் இருந்து 30 கி.மீ. தூரம் உள்ளே அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
நான் முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசினேன். தனது அதிரடிப்படையினர் கர்நாடக காட்டுப் பகுதிக்கு செல்வதை நிறுத்தி ஒரு மாதத்துக்கும்மேலாகிவிட்டதாகத் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசினேன். அவரும் தமிழக அதிரடிப்படை கர்நாடகத்துக்குள் வருவதை நிறுத்திவிட்டதாகக் கூறினார்.
மேலும் எனக்கு கிடைத்த தகவல்களும் (மத்திய உளவுப் பிரிவு) தமிழக அதிரடிப் படையினர் கர்நாடகத்தில் நுழைந்ததாகக் கூறவில்லை.இதனால் வீரப்பன் தனது கேசட்டில் கூறியிருப்பது போல தமிழக படையினர் சுட்டு நாகப்பா இறந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.
இதற்கிடையே வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியை கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கோரினார். டெல்லியில் இருக்கும் அவர் இதுதொடர்பாக அத்வானியிடம் கோரிக்கை வைத்தார். அக் கோரிக்கையை அத்வானி ஏற்றுக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் மத்தியப் படைகள் மீண்டும் வீரப்பன் காட்டுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடக நிலைமை குறித்து பிரதமர் வாஜ்பாயும் முதல்வர் கிருஷ்ணாவிடம் தொலைபேசியில் விவாதித்தார். இன்றுவாஜ்பாயைச் சந்திக்க கிருஷ்ணா நேரம் கேட்டார்.
ஆனால், அவர் குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்வதால் இச் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை.
இதனால் இன்று பிற்பகலில் கிருஷ்ணா பெங்களூர் திரும்புகிறார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications