அரசு பதவி விலக பா.ஜ.க கோரிக்கை: விலக கிருஷ்ணா மறுப்பு
பெங்களூர்:
நாகப்பா கொல்லப்பட்டதற்கு முழுப் பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பதவி விலக வேண்டும் என பாரதீய ஜனதாகோரியுள்ளது. ஆனால், இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக மாட்டேன் என கிருஷ்ணாஅறிவித்துவிட்டார்.
நாகப்பாவின் கொலைக்கு அவரது கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் தலைவரான சரத்யாதவ், தமிழக- கர்நாடக மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு இல்லாததால் தான் நாகப்பாவின் உயிர் பலி கொடுக்கப்பட்டுள்ளதாககுற்றம் சாட்டியுள்ளார்.
இந் நிலையில் மாநில பா.ஜ.க. தலைவர் பசவராஜ் சேடம் நிருபர்களிடம் பேசுகையில்,
நாகப்பாவை பலி கொடுத்துவிட்டதன் மூலம் கிருஷ்ணா தலைமையிலான கர்நாடக அரசு முழுத் தோல்வியடைந்துவிட்டது. அவரை மீட்கஇந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்துடன் பேசி அவரை மீட்கவும் முயலவில்லை.
இந்த அரசுக்கு கொஞ்சமாவது மானம், மரியாதை இருந்தால் உடனே இந்த துயரத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இப்போதுமத்திய அரசின் உதவியுடன் வீரப்பனுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
கிருஷ்ணா கோபம்:
இந் நிலையில் டெல்லியில் இருந்து கிருஷ்ணா இன்று காலை பெங்களூர் வந்தார். வந்தவுடன் விமான நிலையத்திலேயே உள்துறைஅமைச்சர் கார்கே மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அவர் விவாதித்தார்.
ஆனால், இது குறித்து கருத்துத் தெரிவித்த கிருஷ்ணா, அதிரடிப்படையை வாபஸ் பெறச் சொல்லி என்னை இதே எதிர்க் கட்சிகள்வற்புறுத்தியது ஏன் என்று கேட்டார். மேலும் அவர் பேசுகையில், எனது இப்போதைய ஒரே கவலை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைபாதுகாப்பது தான். அதில் தான் கவனம் செலுத்துப் போகிறேன்.
அரசியல் விவகாரங்கள் குறித்து எனக்கு கவலையில்லை. இந்த சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடலாமா என்றும் யோசித்துவருகிறோம் என்றார் கிருஷ்ணா.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications