தாவூதின் தம்பி துபாயில் கைது: சி.பி.ஐ. விரைந்தது
துபாய்:
துபாயில் பதுங்கியுள்ள மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிம் அந் நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.இதையடுத்து அவனை இந்தியாவுக்குக் கொண்டு வர சி.பி.ஐ. குழுவினர் துபாய் விரைந்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் அவனுக்கு பாதுகாப்பு தந்து வருகின்றனர். இதற்குக் கைமாறாய் பேங்க் ஆப் பாகிஸ்தானுக்கு பல நூறுகோடிகளை இப்ராகிம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இவனது தம்பி அனீஸ் இப்ராகிம் மீதும் இந்தியாவில் பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், மற்றும் பிறசினிமா துறையினரிடம் பணம் பறிப்பது, ரியல் எஸ்டேட் அதிபர்களைக் கடத்தி பணம் பறிப்பது போன்ற செயல்களில் இன்னும் தாவூத்கும்பல் ஈடுபட்டு வருகிறது.
இந்த பணம் பறிப்புகளில் தாவூதுக்கு அனீஸ் முழு உதவி செய்து வருகிறான். இவனும் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தான்.
ஆனால், துபாயிலும் தாவூத் கும்பலுக்கு பெரும் சொத்துக்களும் முதலீடுகளும் உள்ளன. இதனை அனீஸ் தான் மேற்பார்வையிட்டுவருகிறான். இவனையும் தாவூதையும் பிடிக்க இன்டர்போல் உதவியை சி.பி.ஐ. நாடியுள்ளது.
இதையடுத்து இவர்களுக்கு எதிராக இன்டர்போல் சர்வதேச ரெட் அலெர்ட் அறிவித்திருந்தது. இந் நிலையில் கடந்த மாதம் 29ம் தேதிஅனீஸ் பாகிஸ்தானில் இருந்து துபாய் வந்து இறங்கினான். இதை இந்திய உளவுப் பிரிவினர் உடனே இன்டர்போலுக்குத் தெரிவித்தனர்.இதையடுத்து அவனைக் கைது செய்யுமாறு துபாய் போலீசுக்கு இன்டர்போல் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அவன் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டான். குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ள இந்தியாவுக்கும் ஐக்கிய அரபுநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. இதனால் அனீசை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகளிடம் இந்தியாகோரியுள்ளது.
இதற்காக சி.பி.ஐ. குழு நேற்றே துபாய் போய் சேர்ந்துவிட்டது. கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சுட்டில்தொடர்புடைய ஆப்தாப் அன்சாரியை துபாய் போலீசார் தான் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தனர். இவனும் தாவூதின் ஆள் தான்.
அதே போல கர்நாடகத்தின் மிகப் பெரிய தாதாவான முத்தப்பா ரை என்பவனும் துபாயில் பதுங்கியபோது அவனைக் கைது செய்துஇந்தியாவிடம் ஒப்படைத்தது அந்த நாடு.
இப்போது அனீசையும் துபாய் இந்தியாவிடம் ஒப்படைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், இன்னொரு மும்பை தாதாவான அபு சலீம் ஒரு இந்தி நடிகையுடன் போர்ச்சுகல் நாட்டில் பிடிபட்டான். ஆனால், இந்தியாவில்மரண தண்டனை உள்ளதால் அவனை ஒப்படைக்க போர்சுகல் மறுத்து வருகிறது. இப்போது போர்சுகல் சிறையில் உள்ள அவனை இந்தியாகொண்டு வர சி.பி.ஐ. தொடர்ந்து முயன்று வருகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications